கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஜமாத்தாக உருவாகியதன் அடையாளமாக சென்ற ஜனவரி மாதம் (07-01-2018) அன்று 150 ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊரின் திருமணம் மற்றும் இறப்பு சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் ஜாமிஆ மஸ்ஜிதின் நிர்வாகத்திற்கு உட்பட்டே நடந்து வருகிறது.
சின்னமுதலியார் சாவடி முதல் சின்ன கோட்டக்குப்பம் வரை உள்ள 4000 தலைகட்டு குடும்பத்தில் உள்ள சுமார் 30,000 முஸ்லிம் மக்களும் தங்களின் அனைத்து செயல்பாடுகளையும் ஜாமிஆ மஸ்ஜிதிற்கு உட்பட்டே நடத்தி வருகிறார்கள். அதுபோல் மேற்குறிப்பிட்ட 18 வார்டுகள் உள்ளடக்கிய அனைத்து இடங்களிலும் யாரேனும் முஸ்லிம்கள் இறந்துவிட்டால் கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மையவாடியில்தான் (கப்ருஸ்தானியில்) அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் கப்ருஸ்தான் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மையத்தை அடக்கம் செய்யும்போது மையத்தை கொண்டு செல்ல கப்ருஸ்தானியில் சரியான பாதை இல்லாததால் மையத் அடக்கம் செய்ய வரும் பொதுமக்கள் கால்களில் முட்கள் குத்தி மிகவும் சிரமம்பட்டு வருகிறார்கள். மேற்படி குறையை களைய கடந்த காலங்களில் நடைபெற்ற நிர்வாக சபையில் பல முறை விவாதிக்கப்பட்டு சிமெண்ட் ரோடு பாதை அமைக்க வேண்டும் என்று அன்றைய ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர்கள் பலர் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை நிறைவேற்ற பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. மேலும் சுடுகாட்டு பாதை அமைக்கும் திட்டத்தில் அரசாங்கம் மூலமாக நிதி பெற்று தாருங்கள் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதிக அளவில் முஸ்லிம் கவுன்சிலர்கள் இருந்தும் மற்றும் முஸ்லிம் தலைவர் இருந்து அந்தகோரிக்கையை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கது.
நீண்ட காலமாக இருந்து வந்த இந்த கோரிக்கையின் அவசியத்தை உணர்ந்து ஜாமிஆ மஸ்ஜித் தன் சொந்த செலவில் தற்போதைய நிர்வாகம் கப்ருஸ்தானில் மையத்துக்களை எளிதில் சுமந்து சென்று அடக்கம் செய்ய சிமெண்ட் ரோடு பாதை அமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர். மற்ற ஊர்களில் உள்ள கவுன்சிலர்கள் தன்னுடைய ஊருக்கு அரசாங்க திட்டங்கள் மூலம் பல திட்டங்களை கொண்டுவர பல முயற்சிகள் செய்கிறார்கள். நமதூருக்கு அதிக அளவில் கவுன்சிலர்கள் இருந்தும் இந்த வேலையை செய்த நிலையில் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் யாரையும் எதிர்பார்க்காமல் இறைவன் கிருபையால் செய்து வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது.