வரும் 22-08-2018 அன்று ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையில் கோட்டக்குப்பம் பெரிய தெரு மஹ்மூதியா மதரஸா வளர்ச்சிக்கு பொது வசூல் செய்யப்பட இருக்கிறது.
கோட்டக்குப்பத்தில் பழமைவாய்ந்த மதரஸாவாகிய பெரிய தெரு மஹமூதியா மதரஸா கடந்த 1934-ம்ஆண்டு தொடங்கப்பட்டு இதுநாள் வரையில் சிறந்த முறையில் மாரக்கச் சேவை செய்து வருகிறது. கோட்டக்குப்பம் மக்களுக்கு அடிப்படை மார்க்க கல்வி வழங்கி வரும் மதரஸா எந்தவித கட்டணமும் இன்றி மாரக்கக் கல்வி வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சில வாடகை வருமானத்தை கொண்டே இந்த மதரஸா நடைபெற்று வருகிறது. மதரஸாவிற்கு சொந்தமான கடைகளின் வாடகை தொகையை கொண்டு மதரஸா செலவினங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அதற்கு வருவாய் கொடுத்துவரும் கடைகள் சேதமடைந்து இருப்பதை சரிசெய்ய நிதி திரண்டப்படுகிறது. அதன்படி வரும் 22-08-2018 அன்று ஹஜ்ஜூப் பெருநாள் அன்று பொது வசூல் செய்யப்பட இருக்கிறது. மதரஸா வளர்ச்சிக்கு தாரளமாக நிதி உதவி செய்து இறையருள் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.