[dropcap] நி [/dropcap] யூயார்க் டைம்ஸ், வாசிங்டன் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற, வெகு ஜன மக்களின் ஏகபித்த ஆதரவுடன் செயல்பட்டு வரும் உலக புகழ் பெற்ற டைனேசர் ீமீீடியாக்கள் மத்தியில் கோட்டகுப்பம் டைம்ஸ் என்னும் சிறு எறும்பு தன் ஊர் மக்களுக்காக இன்று உலாவர தொடங்கி உள்ளது. மேற்சொன்ன பத்திரிக்கைகளை படித்தும் படம் பார்த்தும் வியந்துபோன நாங்கள், உலக நடப்புகளை உடனுக்குடன் தன் வாசகர்களுக்கு நாழிகையில் கொடுத்துவருகிறது. உள்ளது உள்ளபடி சொல்லிவரும் மேற்சொன் பத்திரிக்கைகளை ஒரு உந்து சக்தியாக எடுத்துக்கொண்டு நமது கோட்டகுப்பம் நடப்புக்களை, நிகழ்வுகளை, பொது கட்டுரைகளை மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க ஆர்வம் கொண்டு இன்று உங்கள் ஆதரவுடன் புறப்பட்டுவிட்டோம்.
கோட்டகுப்பம் டைம்ஸ் இன்று தனது வீதி உலாவை தொடங்கிவிட்டது.
18 வார்டுகளில் சுமார் 50,000 மக்கள் தொகையில், சுமார் 25,000 வாக்காளர்களை கொண்ட ஒரு சிறிய ஊரின் பெயரில், பெரிய பெரிய பத்திரிக்கைளில் பெயர்களில் இணையதளம் ஏன் தொடங்க வேண்டும் என்ற கேள்வி நீங்கள் கேட்ககூடும்? ஊர் சிறியதாக இருந்தாலும் நமது எண்ணம், செயல்பாடுகள் பெரியதாக இருக்க வேண்டும் என்ற ஆர்வகோளாரில் கோட்டகுப்பம் டைம்ஸ் என்று பெயரிடப்பட்டு இன்று காற்றில் பரந்து கோட்டகுப்பத்தின் புகழை உலகிற்கு பரப்ப தொடங்கிவிட்டது. தனது சொந்த ஊரின் சிறு சிறு நிகழ்வுகளை வெளியூர்களில் இருந்துக்கொண்டும், வெளிநாடுகளில் இருந்துக்கொண்டும், பார்த்து ரசிப்பது மண்ணின் மைந்தனுக்கு அலாதி இன்பம். இந்த இன்பத்தை நமது ஊர்காரர்களுக்கும், வெளிநாடுகளில், வெளியூர்களில் வசிக்கும் நமது ஊர்காரர்களுக்கும் உடனுக்குடன் தெரிவித்து நாமும் சந்தோசம் அடையவேண்டும் என்ற எண்ணத்தின் வெளிபாடே இணையதள தொடக்கம்.
கோட்டகுப்பத்தின் பெயர் தாங்கி, கட்சிகளின் சார்பாகவும் அமைப்புகளின் சார்பாகவும், சில தனி நபர்களாலும் ஏற்கனவே சில இணைய தளம் இருக்கும்போது இவர்கள் ஏன் புதிதாக தொடங்க வேண்டும். இவர்கள் என்ன இன்னும் கிழித்துவிட போகிறார்கள் என்ற உங்கள் முணுமுணுப்பும் எங்கள் காதுகளில் விழுகிறது. ஏற்கனவே இயங்கிவரும் இணையதளங்கள் அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புச் செய்திகள் மற்றும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளின் செய்திகள், அவர்கள் சார்ந்திருக்கும் இனத்தின் செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருகிறார்கள். நாம் அதையெல்லாம் கடந்து அனைத்து நல்ல செய்திகளையும் வெளியிடவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் காரணமாக புதியதாக இணையதளம் தொடங்கி உள்ளோம். நமது இணைய தளம் எந்த வண்ணத்தையும் சார்ந்ததல்ல. வானவில்போல் வண்ணமயமானது.
நமது கோட்டகுப்பம் டைம்ஸ் இணையதளத்தில் நாங்கள் மட்டும் செய்திகள் வெளியிடப்போவதில்லை. வாசகர்களாகிய நீங்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் மற்றும் அனைத்து உண்மை தகவல்களையும் நமக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தால் உங்கள் அடையாளத்துடனே அந்த செய்தி பதிவேற்றம் செய்யப்படும்.
நமது இணையதளம் அனைவரின் ஆதரவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதால் ஏற்கனவே கோட்டகுப்பம் பகுதியில் இயங்கிவரும் அனைத்து இணைதள நண்பர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்கிறோம்.
அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து வாழும் நமது கோட்டகுப்பத்தில் அனைவருக்குமாக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
நமது இணைதளத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, மத்திய மாநில அரசு உதவிகள், அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்து தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
உங்கள் ஆதரவுடன் தனது பயணத்தை தொடங்கிவிட்ட கோட்டகுப்பம் டைம்ஸ் இணையதளத்திற்கு உங்களின் ஆதரவுகள் தொடரந்து வழங்கி உங்களின் மேலானா கருத்துக்களை உடனுக்குடன் மின்னஞ்ல் மூலம் தெரியப்படுத்துங்கள்.
நமது இணையதளத்தின் “ஆப்” வெளியிடப்பட்டுள்ளது. பிளே ஸ்டோரில் கோட்டகுப்பம் டைம்ஸின் ஆப் பதிவிறக்கம் செய்யது உங்கள் கைபேசி மூலமாக பார்க்க முடியும். மேலும் உங்கள் வியாபாரம் சம்பந்தமான தகவல்களை நீங்களே நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அனைவரும் பார்க் செய்யலாம்.
மின்னஞ்சல் முகவரி kottakuppamtimes@gmail.com எனற முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்
மேலும் எங்களை பின்தொடர முகநூல் பக்கம் முகவரி kottakuppamtimes என்ற முகவரில் தொடருங்கள்
வாழ்க கோட்டகுப்பம்! வளர்க தமிழ்நாடு! வெல்க இந்தியா!
3 comments
Good jobs:) keep going :):) all the best 🙂
Congratulation. Go head with out political interference.
al salam alaikkoum/ podhu nalammoudan indha sevai irukkumayin incha alla yennel iyanra vudaviyudan ennai vungaloudan inaya viroumbougiren