27.1 C
கோட்டக்குப்பம்
April 17, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

இலவச தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா..

கோட்டக்குப்பம் காஜியார் தெரு இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் குழு வளாகத்தில் மகளிர்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் துவக்க விழா நிகழ்ச்சி இன்று 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. பயிற்சி அளிக்கப்படும் வகுப்பறையை மாணவர் குழு மூத்த உறுப்பினர்களான இஹ்சானுல்லாஹ் மற்றும் முஹம்மது இப்ராஹிம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள்.

பயிற்சி வகுப்பு ஏற்பாட்டாளரான நஜீர் பாஷா அவர்கள் தையல் இயந்திரத்தை இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாணவர் குழு உறுப்பினர்களான முஹம்மது முஸ்தபா, முஹம்மது யாசீன், முஹம்மது உசேன், ஹமீது சுல்தான், பிலால் முஹம்மது, அமீர் பாஷா, ரஹமத்துல்லரஹ், இனாயத்துல்லாஹ், முஹம்மது கனி, முஹம்மது பாரூக், அமீன், முஹம்மது அலி, முஹம்மது ரபீக், ஹாஜாத் அலி, சர்புதீன், முஹம்மது உசேன், ஆசிப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  தினமும் மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை தையல் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

கோட்டக்குப்பத்தில் விரைவில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்.

டைம்ஸ் குழு

தந்திராயன்குப்பம் கடற்கரை அலையில் சிக்கி புதுச்சேரி மாணவன் பலி.

டைம்ஸ் குழு

Leave a Comment