கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் தண்ணீர்முக்கம் எனும் கிராமத்தில் வீட்டை விட்டு பொருட்கள் வாங்க வெளியே வரும் மக்கள் கட்டாயம் குடை பிடித்து தான் வர வேண்டும்.
காரணம் இருவர் குடை பிடித்து அருகில் நின்றாலும் விரித்த குடையின் விட்டத்தின் அளவுக்கு இடைவெளி விட்டு தான் நிற்க முடியும். இது ஒரு மீட்டர் அளவு இடைவெளியாக அமையும்
மேலும் விரித்த குடையுடன் ஒருவர் அருகில் இன்னொருவர் உரசிக்கொண்டு நிற்க வாய்ப்பே இல்லை. சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க இந்த உத்தரவை அந்த பஞ்சாயத்து பிறப்பித்துள்ளது
இதற்கு ஏதுவாக மலிவு விலையில் குடைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது
இந்த நடைமுறை உலகமே கடைபிடிக்க ஏற்றதாக இருக்கிறது.
குடைபிடிப்பதோடு முகக் கவசமும் அணிந்து சென்றால் கொரோனா சமூக பரவலை மேலும் தடுக்கலாம். கூடிய விரைவில் ஊரடங்கிலிருந்து அனைவரும் விடுபடலாம்.