27.9 C
கோட்டக்குப்பம்
April 19, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்களிடம் கோட்டக்குப்பம் டைம்ஸின் முக்கிய கோரிக்கை

தமிழகம் முழுவதும் கொரானா தொற்றினால் அனைத்து பகுதிகளும் லாக்டோன் செய்யப்பட்டுள்ளது.

அதுபோன்ற கோட்டகுப்பம் பகுதியில் கடந்த 40 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

மேற்படி கொரானா தொற்று தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக கோட்டகுப்பம் வருகை புரிந்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்களிடம் கோட்டகுப்பம் டைம்ஸ் முக்கிய கோரிக்கை வைத்துள்ளது.

அதன்படி கோட்டகுப்பம் பகுதியில் உள்ள மக்கள் அனைத்து தேவைகளுக்கும் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தை நம்பி உள்ளது.

அத்தியாவசிய மருத்துவ தேவைக்கும் உணவு பொருட்கள் வாங்குவதற்கும் அனைத்திற்குமே அருகில் உள்ள புதுச்சேரி நம்பி உள்ளோம்.

தற்போதுள்ள சூழலில் புதுச்சேரி சாலைகள் அனைத்தும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. கோட்டக்குப்பத்தில் இருந்து புதுச்சேரிக்கு யார் சொன்றாலும் புதுச்சேரி போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.

அதனால் கோட்டகுப்பம் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

இது சம்பந்தமாக நமது நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் நாங்கள் புதுச்சேரிக்கு சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் புதுச்சேரி மாநிலத்தின் நுழைவதற்கு ஒரு அனுமதிச் சீட்டு வாங்கிக் கொடுக்குமாறு கேட்டிருந்தோம்.

வியாபாரிகளும் மருத்துவம் உதவி தேவைப்படுபவரும் மட்டும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிச் சீட்டு ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தோம்.

அதேபோன்று மீனவ நண்பர்களும் தங்களின் படகுகளுக்கு டீசல் வாங்கி செல்ல புதுச்சேரியை நம்பி உள்ளார்கள். ஆனால் தற்போது அந்த மீனவ நண்பர்களையும் புதுச்சேரி நுழைவதற்கு புதுச்சேரி போலீசார் தடுத்து வருகிறார். அவர்களும் தங்களுடைய படகுகளில் மீன்பிடிக்க எடுத்துச் செல்ல முடியாமல் திணறுகிறார்.

இந்த இரண்டு கோரிக்கையும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்களிடம் நாம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக அந்த இடத்திலேயே புதுச்சேரி முதல்வர் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு நாம் சொன்ன இரண்டு கோரிக்கையையும் இரண்டு குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக பேசினார்கள். புதுச்சேரி முதலமைச்சர் அவர்கள் அந்தக் கோரிக்கைகளை கேட்டுக்கொண்டு அனுமதி சீட்டு வழங்குவது சம்பந்தமாக எங்களுடைய புதுச்சேரி அரசு அதிகாரிகளை கலந்து பேசி முடிவு எடுப்பதாக தொலைபேசி தெரிவித்துள்ளார்கள்.

அந்த கருத்தை எங்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள். அதன்படி நாம் வைத்த கோரிக்கையை உடனடியாக புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கு எடுத்துரைத்த நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் நாடாளுமன்ற .

இந்த நிகழ்வின்போது கோட்டகுப்பம் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் அவர்களும் உடன் இருந்தார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

இந்திய அரசியலமைப்பு சட்ட விழிப்புணா்வு சைக்கிள் பயணம்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பரகத் நகரில் குடிநீர் தண்ணீர் சீராக்கக்கோரி பேரூராட்சி அலுவலரிடம் மனு

கோட்டகுப்பத்தில் கட்டாய ஹெல்மெட்

Leave a Comment