கோட்டகுப்பம் பொதுமக்களில் அவசர தேவை மற்றும் மருத்துவ உதவிக்காக – மாண்புமிகு புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்களிடம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக மனு அளிக்கப்பட்டது, அதில்
கோட்டக்குப்பத்தில் கொரோன தொற்று இல்லை
கடந்த மாதம் கோட்டகுப்பம் பகுதியை சார்ந்த ஒருவருக்கு நோய் தோற்று இருக்க வாய்ப்புள்ளதாக என்று கருதி சந்தேகத்தின் அடிப்படையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் . பரிசோதனை முடிவில் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நோய் தொற்று இல்லை என சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை வீட்டிற்கு திருப்பி அனுப்பிவிட்டார்கள். விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை தகவலின்படி, கோட்டகுப்பம் பகுதியில் கொரோன தொற்று பாதிப்பு இல்லை என்ற தகவலை எடுத்துரைத்தனர்.
மருத்துவ தேவைக்கு
மேலும் கோட்டகுப்பம் பகுதியில் இருந்து அவசர மருத்துவ சிகிச்சைக்கு, புதுவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு செல்பவர்களை கருவடிக்குப்பம் எல்லை அருகே உள்ள சோதனை சாவடியில் புதுச்சேரி காவல் துறையினர் அனுமதிப்பதில்லை என்ற தகவலையும் எடுத்துரைத்து மனு கொடுத்தனர்.
சந்திப்பு குறித்து மாண்புமிகு புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் கூறியதாவது
இதுவரைக்கும் கொரோன தொற்று கோட்டகுப்பத்தில் இருப்பதாகவே தகவல் வந்தமையால், அதனால் மேலும் தீவிரம் அடையாமல் தடுக்கவே எல்லை பாதுகாப்பில் போலீசார் கெடுபிடி செய்தனர் என்றும், விரைவில் இது குறித்து உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் பொழுது கோட்டகுப்பம் நகர தலைவர் முஹம்மது பாரூக், துணைத்தலைவர் ரஷீத் மற்றும் பேரிடர் மீட்பு குழு நண்பர்கள் சாதிக் மற்றும் சபீர் உடன் இருந்தனர்.