கடந்த சில நாட்களாகவே, E.B-கரண்ட் பில் கணக்கெடுப்பில் (ரீடிங்) அதிகப்படியாக சேர்த்து எடுப்பதாக மக்கள் மத்தியில் அச்சம் வந்து கொண்டிருக்கிறது.
கோட்டக்குப்பத்தில் ஈபி ரீடிங் கடந்த இரண்டு நாட்களாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ரீடிங் எடுக்க வரும் அலுவலரிடம் பணத்தை கழிக்க அனுமதிக்காதீர்கள், அதற்கான யூனிட்டை கழிக்க சொல்லுங்கள் என்றும், மேலும் 4 மாத ரீடிங்கை ஒரேடியாக கணக்கிடுகிறார்கள் என்றும் பல விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது.
அதனடிப்படையில் “கோட்டகுப்பம் டைம்ஸ்” EB அலுவலகத்திற்கு நேரில் சென்று J.E – திரு. ஆதிமூலத்தை நேரில் சந்தித்து, உண்மை நிலவரத்தை கேட்டு அறிந்தோம், அதில் அவர் கூறியதாவது,
லாக் டவுன் நேரத்தில் நாங்கள் எப்படி சார் மக்களை சிரமத்துக்கு உள்ளாகுவோம், அவர்கள் நிலைமையை எங்களுக்கு தெரியாதா?
மேலும் வாட்ஸ் அப்பில் வந்த வதந்தியால், மக்கள் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த மாதிரியான பொய் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும் E.B-ரீடிங் கடந்த நான்கு மாதத்திற்கும் எப்படி எடுக்கப்படுகிறது என்று கேட்டு, அதன் விளக்கங்கள் உங்களுக்காக,
உதாரணமாக தற்போது எடுக்கப்பட்டுள்ள ரீடிங் நான்கு மாதத்திற்கு – 900 unit என்று வந்தாள்.
இரண்டு மாதத்திற்கு = 900/2 = 450 unit
450 unit(சென்ற மாதம்) = ₹. 980 (அரசு கொடுக்கும் 100 யூனிட் மானியம் உட்பட)
450 unit(இந்த மாதம்) = ₹. 980 (அரசு கொடுக்கும் 100 யூனிட் மானியம் உட்பட).
மொத்த தொகை = ₹. 1960.
நீங்கள் ஏற்கனவே சென்ற மாதம் தொகை செலுத்தி இருப்பின், அந்த தொகையை கழித்து மீதி தொகையையும் மற்றும் இந்த மாதம் தொகையையும் சேர்த்து செலுத்தப்பட வேண்டும்.
உங்களுக்கு இந்த மாதம் எவ்வளவு யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிந்திருந்தால், இந்த லிங்கை பயன்படுத்தி – http://www.biogem.org/tool/TNEB/ உங்களுக்கு எவ்வளவு ஈபி-பில் தொகை வரும் என்று இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் அவர் கொடுத்த, இன்னொரு கணக்கு உதாரணத்திற்காக,
நாம் லாக் டவுன் நேரத்தில் அதிகப்படியாக மின்சாதனங்களை பயன்பாட்டு செய்ததே , மின் கட்டணம் உயர்வுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. மேலும் நாம் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் ஒவ்வொரு யூனிட்டுக்கும் ரூபாய் 6.60 வசூலிக்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
உங்களுக்கு மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின், அதனை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.