விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதிகளில் கொரோணா நோய் தடுப்பு சம்மந்தமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணா துரை அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ரவுண்டானா வரை நடந்தே சென்று கோட்டக்குப்பம் பகுதியில் அரசின் சமூக விலகல் முறையாக கடைப்பிடிக்கபடுகிறதா என்றும் அரசு குறிப்பிட்ட நேரத்தில் கடைகள் அடைக்கப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார்.
இரவு 8 மணிக்கு மேல் திறந்திருக்கும் கடைகளுக்கு சீல் வைக்கவும் முக கவசம் அனியாதவர்களிடம் அபராதம் விதிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது கோட்டக்குப்பம் DSP அஜய் தங்கம் கோட்டகுப்பம் காவல் ஆய்வாளர் சரவணன் கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.