கோட்டக்குப்பத்தில் நாளை முதல் மாலை 4 மணிக்கெல்லாம் கடைகளை அடைக்க வேண்டும்.
அரசு அறிவித்த உத்தரவின்படி இதுநாள் வரையில் கோட்டகுப்பம் கடைத்தெருக்களில் கடைகள் 8 மணி வரை செயல்பட்டு வந்தன.
இன்று திடீரென காவல்துறையினர் 5 மணிக்கெல்லாம் கடைகளை அடைக்க வேண்டும் என்று அறிவிப்பு செய்தனர்.
முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென ஐந்து மணிக்கெல்லாம் கடைகளை அடைக்க வேண்டும் என காவல்துறை அறிவிப்பு செய்தியால், டீக்கடைகள் பஜ்ஜி போண்டா ஹோட்டல்கள் போன்ற உணவுப் பொருள் விற்பனை செய்யும் கடைகார்ர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி நிலையில் கடைகளை சீக்கிரம் அடக்க வேண்டுமென்று பேரூராட்சி அலுவலர்கள் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தவர்களை கோட்டகுப்பம் வியாபாரிகள் முற்றுகையிட்டு திடீரென ஏன் முன்னறிவிப்பு இல்லாமல் கடைகளை ஐந்து மணிக்கெல்லாம் அடைக்க சொல்கிறீர்கள். முன்னறிவிப்பு செய்திருந்தால் அதற்கு தகுந்தார்போல் தங்களுடைய வியாபாரத்தை நாங்கள் முன்ஏற்பாடு செய்து இருப்போம். இந்நிலையில் டீக்கடை ஹோட்டல் போன்ற உணவு பொருட்கள் வியாபாரம் செய்யும் கடைகள் பொருட்கள் தயார் செய்த நிலையில் திடீரென கடைகளை அடைக்கச் சொன்னால், எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை யார் தருவது என்று அவருடன் வாக்குவாதம் செய்தனர்.
இந்நிலையில் இன்று மட்டும் 7 மணி வரையில் கடைகளை வைத்துக்கொண்டு, நாளை முதல் 4 மணிக்கெல்லாம் கடைகளை அடைக்க வேண்டும் என்று பேரூராட்சி ஊழியர்கள் அறிவிப்பு செய்தனர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு அவர்களுடைய அறிவிப்பை ஏற்று வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
இதனால் நாளை முதல் 4 மணிக்கெல்லாம் அனைத்து கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..