30.2 C
கோட்டக்குப்பம்
December 3, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளத்தின் APP (செயலி) இன்று வெளியிடப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளத்தின் ஆப் (செயலி) இன்று சிறப்பான முறையில் வெளியிடப்பட்டது.

கோட்டக்குப்பம் காவல் துணை கண்காணிப்பாளர் (D.S.P) திரு. அஜய் தங்கம் அவர்கள் தலைமையில், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. சரவணன், கோட்டக்குப்பம் செயல் அலுவலர் திரு. ராமலிங்கம் மற்றும் கோட்டக்குப்பம் முன்னாள் இன்னாள் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகளான இஹ்சானுல்லா, பகுருதீன் பாருக், முஹம்மது பாரூக் மற்றும் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

முதலில் டைம்ஸ் குழும உறுப்பினர் பிலால் முகமது அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

அதனைத்தொடர்ந்து டைம்ஸ் குழும உறுப்பினர் ஹாஜாத் அலி அவர்கள் செயலி குறித்து அறிமுக உரை ஆற்றினார். பிறகு மீடியா சாதிக் அவர்கள் செயலியின் நோக்கமும் மற்றும் விளக்கமும் குறித்து பேசினார்கள்.

இவர்களைத் தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய, D.S.P அஜய் தங்கம் அவர்கள் கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அன்றைய நிகழ்வுகளை நேர்மையாக உள்ளதை உள்ளபடியே பதிவேற்றம் செய்து வருகிறார்கள். அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் காவல் துறை சார்ந்த நிகழ்ச்சிகளை நாங்கள் எங்கள் தளத்தில் பதிவிடுவதற்கு முன்பே அவர்கள் கோட்டக்குப்பம் டைம்ஸில் பதிவிட்டு வருவது சிறப்புக்குரியது. இவர்களின் பணி பாராட்டுக்குரியது என்று வாழ்த்திப் பேசினார். அதனைத் தொடர்ந்து கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் சரவணன் அவர்கள் பேசும் போது, கோட்டகுப்பம் டைம்ஸ் இணையதள குழுவினர்கள் பாசிட்டிவான விஷயங்களை மக்களுக்கு பகிர்கிறார்கள் அது பாராட்டுக்குரியது என்று வாழ்த்தி பேசினார்கள். அதனைத் தொடர்ந்து செயல் அலுவலர் ராமலிங்கம் அவர்கள் பேசும்போது அரசு விதித்த தடை உத்தரவைகளையும், அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகளையும் இந்த இணையதளத்தின் மூலம் கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த குழுவினர் தெரிவித்து வருவது மிகவும் சிறப்புக்குரியது, மேலும் கொரோனா காலத்தில் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார்கள். இதேபோன்று ஜாமிஆ மஸ்ஜிதின் முன்னாள் மற்றும் இந்நாள் முத்தவல்லிகள், நம் இணையதளம் செயலி குறித்து சிறப்பாக வாழ்த்திப் பேசினார்கள்.

இறுதியாக ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் செயலி வெளியிடப்பட்டது, அப்போது அனைவரும் எழுந்து நின்று வாழ்த்தி வரவேற்றார்கள்.

இறுதியில் அனைவரையும், டைம்ஸ் குழு உறுப்பினர் அமீர் பாஷா அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை டைம்ஸ் குழு உறுப்பினர்களான சர்புதீன் என்கிற சேட்டு, முகம்மது ரஃபி, முஹம்மது அலி, ஹாஜாத் அலி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் 78-வது சுதந்திர தின விழா.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் நாளை சுகாதாரத் துறை சார்பாக கொரோனா பரிசோதனை முகாம்.

கோட்டக்குப்பம் அருகே சாலை விபத்தில் திமுக எம்.பி.,யின் மகன் பலி

டைம்ஸ் குழு

Leave a Comment