கோட்டக்குப்பம் பேரூராட்சி உட்பட்ட பகுதியில் இன்றைய தேதி வரை 5 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் நேற்றைய முன்தினம் – 2 , நேற்று – 2 மற்றும் இன்று – 1 தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த 5 கொரோனா தொற்றும் உள்ளூர் வாசிகளால் ஏற்படவில்லை. இவர்கள் பணி நிமித்தம் மற்றும் இதர வேலைகள் காரணமாக திண்டிவனம், புதுச்சேரி, சென்னை போன்ற இடங்களுக்கு சென்று வந்ததால் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
உள்ளூரில் தொழில் செய்து வாழ்ந்து வரும் நமதூர் மக்களுக்கு யாருக்கும் எந்த தொற்றும் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் நமது ஊர் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
வெளிமாவட்டங்களில் வேலை செய்யும் நமது ஊர் மக்கள் மிகவும் கவனத்துடனும், மாஸ்க் மற்றும் கிளவுஸ் அணிந்தும், அரசு சொல்லும் விதிமுறைகளை அவசியம் பின்பற்றவும் என சுகாதாரத்துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.
பொதுமக்களாகிய நாமும் அரசின் விதிகளை மதித்து நடக்க வேன்டும்.
கோட்டக்குப்பம் பகுதியை சார்ந்த நபர்கள் தேவையின்றி அருகாமையில் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தயவுசெய்து தவிர்த்து கொள்ளுங்கள். பணி நிமித்தமாக செல்பவர்கள் செல்லும் இடங்களில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடியுங்கள்.
வெளியே செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்லுங்கள். அருகாமையில் உள்ள பகுதிகளில் இருந்து கோட்டக்குப்பம் பகுதிக்கு வருபவர்களாளும், கோட்டக்குப்பம் பகுதியில் இருந்து அருகாமையில் உள்ள பகுதிகளுக்கு செல்வதாலும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
அரசின் விதிகளை மதிக்காமல் அலட்சியமாக இருந்தால் பாதிக்கப்படுபவர்கள் நாம் மட்டும் அல்ல, நம் குடும்பத்தாரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நமது சுகாதார அதிகாரி கூற்றின்படி மீண்டும் நினைவுபடுத்துகிறோம், நமது பகுதியில் உள்ளூர் வாசிகளால் இதுவரையில் எந்த வித கொரானா தொற்றும் ஏற்படவில்லை. வெளியில் சென்று வருவதால் அங்கிருந்தே நோய்த்தொற்று ஏற்படுகிறது. ஆகவே நாம் அவசிய காரணங்களைத் தவிர வேறு தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்துக் கொள்வோம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
அரசும், உள்ளூர் நிர்வாகமும் நோய் தோற்று வராமல் இருக்கவும், நோய்த்தொற்று பரவாமல் இருக்கவும் தினந்தினமும் பணி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு நாம் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டியது முக்கிய கடமையாகும்.
மேலும் நோய் தொற்று பரவாமல் நம்மை நாமே காத்துக் கொள்வோம்.
கோட்டக்குப்பம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்யவும் – https://play.google.com/store/apps/details?id=com.kottakuppamtimes.news
3 comments
Can you please mention the street names atleast
Ok soon.
Indira nagar – 3 and Kottakuppam -2.