கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று மேலும் 3 புதிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது, அதன் விபரங்கள்
* இந்திரா நகர் – 3 (முத்தியால்பேட்டை பகுதியைச் சார்ந்தவர்கள், தற்போது இந்திரா நகரில் வசிக்கின்றனர்)
* 6-வது வார்டு – 4
* கோட்டக்குப்பம் – 1
இந்த தொற்றுக்கள் அனைத்தும் வெளியிலிருந்து வந்தவர்கள் மூலமே பரவியுள்ளது.
இன்று ஏற்பட்ட இந்த 3 தொற்றுகளும், புதுச்சேரியில் பணிபுரிந்த ஒருவர் தான் பணிபுரிந்த இடத்தில் இருந்து தொற்று ஏற்பட்டு பிறகு, கோட்டக்குப்பத்தில் தான் வசிக்கும் பகுதியில் இவர் மூலம் இருவருக்கு தொற்று ஏற்பட்டுவிட்டது என சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.
கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் வசிக்கும் உள்ளூர்வாசிகளால் ஏற்படவில்லை.
இங்கிருந்து வெளியே சென்று உள்ளே வந்தவர்களாதான், இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
ஆகவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவது, தேவை இல்லாமல் வெளியே செல்லாதீர்கள்.
எனக்கு வராது என்று அலட்சியம் காட்டாதீர்கள்
நம்மருகே, நாமது தெருவின் அருகே, நமது பக்கத்து வீட்டின் அருகே வந்து விட்டது.
இனியும் அரசின் வழிகாட்டுதல்களை உதாசீனப்படுத்தாமல் , அனைத்து வழிமுறைகளையும் முறையாக பின்பற்றி, கொள்ளை நோய் தொற்று முற்றிலுமாக ஒழித்து பரவாமல் நமதூரை பாதுகாப்போம்.
கோட்டக்குப்பம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்யவும் – https://play.google.com/store/apps/details?id=com.kottakuppamtimes.news
2 comments
Kottakuppam-1: which street? People can avoid to pass by particular street, we don’t ask you to mention particular person name
In my opinion, it’s not good to reveal the name in public. However the surrounding people would have known about the affected Person in detail and of course they will be careful and avoid to go near the affected area.