25.1 C
கோட்டக்குப்பம்
November 21, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதை என்பது முற்காலத்தில் புதுச்சேரி மற்றும் கோட்டக்குப்பத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்துள்ளது.

தற்போது அந்த சாலை உள்ளூர் சாலையாக சுருங்கிவிட்டது. ஈசிஆர் போன்ற நெடுஞ்சாலைகள் வந்ததால், அந்த சாலையின் பயன்பாடு உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது. முன்பு சுமார் 36 அடி அகலம் இருந்த அந்தச் சாலை காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளால், இன்று பத்து அடி அகலத்திற்கும் குறைவாக சுருங்கிவிட்டது.

கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லையில் ஆரம்பிக்கும் இந்த பழைய பட்டினம் பாதை என்பது தற்போதுள்ள இந்திரா நகர், பாரதி நகர் பகுதியில் முடிவடைகிறது.

இந்த சாலை தொடங்கும் பகுதியான முத்தியால்பேட்டை கோட்டகுப்பம் முதல் வாய்க்கால் வரை சிறிது அகலமாக காணப்பட்டாலும், வாய்க்காலில் இருந்து புறா தோப்பு வரை குறுகி காணப்படுகிறது.

முன்பு காலத்தில் லாரி போன்ற கனரக வாகனங்கள் எளிதாக சென்று வந்த நிலையில் தற்போது ஆட்டோக்கள் செல்வதே பெரும் சிரமமாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த பழைய பட்டின பாதையை மத்திய அரசின் சிறப்பு திட்டத்தின் மூலம் புதியசாலை அமைக்கும் பணி கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் மேற்கொண்டுள்ளது. அதற்காக தற்போது அந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறுகிறது.

சுமார் 20 அடி அகலத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

அதனால் சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் துணைகொண்டு அளவிடப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் காந்தி ரோடு அடைப்பு. தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் தளர்வுகளற்ற முழு அடைப்பு கோட்டக்குப்பத்திலும்.

கோட்டக்குப்பம் பகுதி மக்களின் அன்பைப் பெற்ற டிஎஸ்பி அஜய் தங்கம் இடமாற்றம்.

டைம்ஸ் குழு

வெளிநாட்டு வாழ் சொந்தங்கள் அனைவருக்கும் ஈத் அல்-அழ்ஹா(பக்ரீத்) நல்வாழ்த்துக்கள்.

டைம்ஸ் குழு

Leave a Comment