தமிழக அரசின் உதவித்தொகை பெற விண்ணபிக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 6 ஆம் தேதி முதல் பார் கவுன்சிலின் இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல் ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கும் தமிழக அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும்
1.தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்ட கல்ல்லூரியில் சட்டம் படித்திருக்க வேண்டும்.
2. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்
3. பார்கவுன்சிலில் பதிவு செய்து மூன்று வருடங்களுக்குள் இருக்க வேண்டும்.
4. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருக்க வேண்டும்.
5. ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எனவும் வரும் 6ம் தேதி முதல் பார் கவுன்சிலின் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.