22.9 C
கோட்டக்குப்பம்
November 22, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் யாருக்கேனும் சளி, ஜுரம், இருமல் இருந்தால் உடனே தெரியப்படுத்தவும் – சுகாதாரத்துறை ரவி அவர்கள் அறிவுரை.

கொரோனா பாதிப்பு காரணமாக, அச்சத்திலுள்ள பெரும்பாலான மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்த்துள்ளனர். காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறலுக்கு, மருந்துக்கடைகளுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்; டாக்டரை அணுக வேண்டும்.

ஆய்வின் படி, 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு, அறிகுறிகளே இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.ஒரு வேளை கொரோனா தொற்று இருந்தால், டாக்டரை அணுகாமல் மருந்துக்கடைகளுக்குச் சென்று மாத்திரைகள் உட்கொண்டால், காய்ச்சல், சளி, இருமல் அப்போது சரியானது போலத்தோன்றும். ஆனால், கொரோனா பாதிப்பால் உடல் திடீரென மோசமான நிலையை அடையும். அதனால், காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறலுக்கு மக்கள், மருந்துக்கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். டாக்டரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மேலும் உங்களுக்கு சளி, ஜுரம், இருமல் இருந்தால் பயப்பட வேண்டாம், சுகாதாரத் துறையை அணுகினால் உங்களுக்கு சரியான வழிகாட்டுதலுடன் முறையான மருத்துவம் கொடுக்கப்படும் எனவும், இதன் மூலம் தொற்று யாருக்கும் பரவாமல் தடுக்கலாம் எனவும் கோட்டக்குப்பம் சுகாதாரத் துறை ஆய்வாளர் ரவி தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு நோய் பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் சுகாதாரத்துறை ரவி அவர்களை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். அவரது தொலைபேசி எண் – 94864 76433

கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன், தெரிந்து கொள்ள எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் – https://bit.ly/3dGx0XR

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொது நல மனு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை 18-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

விழுப்புரத்தில் வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

Leave a Comment