கோட்டக்குப்பத்தில் கொரானா தொற்றினால் ஒருவர் இறந்துவிட்டார். அவரின் உடலை கோட்டக்குப்பம் பெரிய பள்ளிவாசல் மையவாடியில் தனியிடத்தில் அரசு அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி அவர்களின் முன்னிலையில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதற்காக பிரத்தியோகமாக தோண்டப்பட்ட சுமார் 12-15 அடி ஆழ பள்ளத்தில் தன்னார்வலர்களின் உதவியுடன் அந்த உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் ஊர் பெரியவர்களுடன் ஆலோசித்து இந்த உடலை அடக்கம் செய்வதற்காக தனி இடத்தைத் தேர்வு செய்து கொடுத்தனர்.
அதன்படி அந்த இடத்தில் அடக்கம் செய்வதற்கான அனைத்து வேலைகளும் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றது.
இறந்தவரின் இறுதி மரியாதை முறையாக செய்யப்பட்டு சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வு டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், செயல் அலுவலர், சுகாதார துறை அதிகாரி, மற்றும் ஊர் ஜமாத்தார்கள் முன்னிலையில் நடைபெற்றது.
பெருந்தொற்றினால் இறந்தவர்களை இறுதி மரியாதை செய்வதில் சில இடங்களில் சர்சைகள் ஏற்பட்ட நிலையில், நமது பகுதியில் இறந்தவரின் உடலை உரிய மரியாதையுடன் உரிய சடங்குகளின் படி நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த உடல் அடக்கத்திற்கு பள்ளிவாசல் நிர்வாகமும், ஊர் பெரியவர்களும், தன்னார்வலர்களும், அரசு அதிகாரிகளும் தூய்மைப் பணியாளர்களும் கடந்த 2 நாட்களாக மிகவும் சிரத்தையுடன் செயல்பட்டார்கள்.
கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன், தெரிந்து கொள்ள எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் – https://bit.ly/3dGx0XR