April 8, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியின் கொரோனா தொற்று நிலவரம்.

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியின் தற்போதைய கொரோனா தொற்று நிலவரம்.

கோட்டக்குப்பம்3
சின்ன கோட்டகுப்பம்3
6-வது வார்டு5
இந்திரா நகர் (Case Transferred to Pondicherry, முத்தியால்பேட்டை பகுதியைச் சார்ந்தவர்கள், தற்போது இந்திரா நகரில் வசிக்கின்றனர்).11

ஆக மொத்தம் கொரோனா தொற்று எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

நமது பகுதி மக்கள் விழிப்புடன் இருக்கும் நோக்கத்திலேயே நாம் இந்த கொரானா சம்பந்தமான புள்ளி விபரங்களை வெளியிட்டு வருகிறோம்.

இன்றையதினம் பக்கத்திலுள்ள புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, மேலும் தொற்று எண்ணிக்கை 1151-ஆக உயர்ந்துள்ளது. அதன் தாக்கமாகவே நமது பகுதியிலும் ஒரு சில கொரானா தொற்று காணப்படுகிறது.

ஆகவே நம் மக்களிடையே மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்வது நாம் நம்முடைய பகுதியை விட்டு வெளியே செல்லாமல், அரசு காட்டிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கொரானா தொற்று வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தற்காப்பு நடவடிக்கைகளை எல்லா வகையிலும் நாம் செய்து கொள்ள வேண்டும். நமது பகுதியில் தொற்று எண்ணிக்கை தினம்தினம் அதிகரித்துக்கொண்டு வருகிறது என்று இந்த நேரத்தில் மிகுந்த வேதனையுடன் குறிப்பிட வேண்டியுள்ளது. ஆகவே நம்மை நாமே காத்துக்கொள்ள அரசு அறிவித்த வழிகாட்டுதல்களை உறுதியாக பின்பற்றி தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வோம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் நாட்டுப் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் தந்தை – மகன் பலி

டைம்ஸ் குழு

இப்ராஹிம் கார்டன் பகுதியில் இனியாவது குப்பைகள் கொட்டுவது தவிர்க்கப்படுமா? கோட்டக்குப்பம் நகராட்சியின் அதிரடி நடவடிக்கை.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை 20-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

Leave a Comment