நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் வழங்கக்கூடிய “ஆர்சனிக் ஆல்பம் 30” என்ற ஹோமியோபதி மருந்தை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி நமது கோட்டக்குப்பம் பகுதியில் சென்ற சனிக்கிழமை அன்று 500 குடும்பங்களுக்கு அந்த ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டு மக்கள் பயன் படுத்தினார்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் கட்டமாக பரகத் நகர் பகுதியில் சுமார் 250 குடும்பத்தினர்களுக்கு அந்த மருந்து வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜமியத் நகர், சமரச நகர் மற்றும் கோரி தோப்பு பகுதியிலும், இந்த மருந்து மக்களுக்கு இன்று வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மிஸ்வாக் குழுவினர் பிலால் முஹம்மது, முகம்மது ரஃபி, ஆஜாத் அலி, சர்புதீன் சேட்டு, முஹம்மது அலி, அமீர் பாஷா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பரகத் நகர் முத்தவல்லி பஷீர் அஹமது, முன்னாள் முத்தவல்லி ஜாமியா மஸ்ஜித் இஹ்சானுல்லா, பரக்கத் நகர் துணை செயலாளர் முஹம்மது ஷரிப், பரகத் நகர் நிர்வாகி பாருக் மரைக்காயர், சமரசமாக முத்தவல்லி மௌலவி முஹம்மது சித்தீக், ஜமாத்துல் உலமா செயலாளர் மௌலவி அப்துல் காதர், ஜமியத் நகர் ஹஜ், ஆசிப் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டார்கள்.
கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன், தெரிந்து கொள்ள எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் – https://bit.ly/3dGx0XR