ஆன்லைன் வகுப்புகளுக்க்கான புதிய விதிமுறை வெளியிட்ட : மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த பிரப்பிக்கபட்ட ஊரடங்கு உத்தரவால் பள்ளிகளும் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் அடுத்த கல்வியாண்டும் தொடங்கி விட்டது, மேலும் பல தனியார் பள்ளிகளும் அரசு பள்ளிகளும் ஆன்லைனில் பாடங்கள் நடத்தி வரப்படுகின்றது.
இந்த ஆன்லைன் வகுப்பு குறித்து சில விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இதனை அடுத்து தற்போது அதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அந்த விதிமுறையில்
- மழலையர் பள்ளிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஒரே நாளில் 30 நிமிடங்களுக்குள் மட்டுமே நடத்த வேண்டும்
- 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 2 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும்
- 9-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 4 ஆன்லைன் வகுப்புகள் 45 நிமிடங்கள் மிகாமல் இருக்க வேண்டும்
- என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது
- படுக்கை அறைகளில் இருந்து ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்கக் கூடாது படுக்கை அறைகளில் வைத்து கணினி, செல்போன், லேப்டாப், டேப்லெட் பயன்படுத்தக்கூடாது.
மேலும் முழு விவரங்களுக்கு:
https://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/pragyata-guidelines_0.pdf