கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லையிலிருந்து பரகத் நகர் வரை காந்தி ரோட்டின் மேற்குப்பகுதியில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. கடந்த மூன்று மாதங்களாக இதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. முதலில் மேற்சொன்ன பாதையில் கால்வாய் அமைக்கப்பட்டு அதன் மேல்புறம் மூடப்படுகிறது. அதை ஒட்டி உள்ள காலியிடத்தில் நடைபாதைக் என்று நடைபாதை கற்கள் பதிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
கடந்த மூன்று மாதங்களாக இந்த பணிகள் நடைபெறுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது. மேலும் இப்பணிகளில் இப்பகுதி வியாபாரிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். ஏற்கனவே கொரானா நெருக்கடிகளினால் 70% வியாபாரம் பாதித்த நிலையில், தற்போது இந்த பணிகளாலும் வியாபாரம் பாதித்து உள்ளதாக வியாபாரிகள் கூறிவருகிறார்கள். ஆகவே மேற்படி பணிகளை மிகத் துரிதமாக முடித்து பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் உதவிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்கிறது.