கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதையில் புஸ்தானியா பள்ளிவாசல் முதல் புறாதோப்பு வரை புதிய சாலை போடும் பணியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இதற்கு முன்னதாக சாலையில் உள்ள சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
அதன் பின்னர் பழைய பட்டிணப் பாதை ரகுநாதன் கிளினிக் முதல் புறாதோப்பு வரை பழைய சாலையை JCP எந்திரம் மூலம் சுரண்டப்பட்டு, கடந்த 15 நாட்களாக அப்படியே கிடக்கிறது.
நடுக்குப்பம், புதுத்தெரு, ஆறாவது வார்டு, தேவி தியேட்டர் சாலை, கோட்டக்குப்பம் பகுதி மக்களின் முக்கிய சாலையாக இருப்பதால் தினமும் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் இந்த சாலையையே பிரதானமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
2 சக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் வரை இந்த சுரண்டப்பட்ட தார் ஜல்லிகளின் மேல் வாகனங்களில் கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
அதிலும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிதிவண்டிகளில் செல்பவர்களும் தங்கள் வாகனங்கள் இந்த பாதையில் கடக்கும் போது அடிக்கடி டயர் பஞ்சர் ஏற்பட்டு மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம் என்று தங்களின் மன வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
முக்கியமான சாலையை செப்பனிடும் பணியை ஆரம்பித்த நமது உள்ளூர் நிர்வாகம், அந்தப் பணியை போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் விரைந்து அமைக்க வேண்டும்.
ஏனென்றால் கோட்டக்குப்பத்தில் முக்கிய சாலையாக இது இருப்பதால் பெரும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
பொதுமக்களின் சிரம நிலையை கண்டு மிக விரைவில் இந்த சாலை பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து பொது மக்களின் முக்கிய வேண்டுகோளாக இருக்கிறது.
பழைய குடிநீர் தண்ணிர் குழாய்களை மாற்றி அமைக்க கோரிக்கை:
மேலும் இந்த சாலையை போடுவதற்கு முன்பு இதன் அடியில் செல்லும் பழைய குடிநீர் குழாய்களை அப்புறப்படுத்தி புதிய குழாய்களை பதிக்க வேண்டும் என்றும் பல மனுக்கள் நமது பேரூராட்சி மன்றத்தில் பல குழுவினரால் வழங்கப்பட்டு வந்துள்ளது. மேலும் தார் சாலை அமைக்கும் பொழுது, இப்பொழுது இருக்கும் தார் சாலைகளை முழுவதுமாக அகற்றிவிட்டு, அதே மட்டத்திலே அமைக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
அந்த கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்ற வேண்டும். சாலை அமைத்த பிறகு மறுபடியும் குழாய் பதிப்பதற்காக சாலையை உடைத்து அதை விரைவில் பழுதடையச் செய்யக்கூடாது. சாலை பணி துவங்கவதர்கு முன்பே, குழாய் பதிக்கும் பணிகளை முடித்து மேற்குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக அமைய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் வலியுறுத்துகிறார்கள்.
பரகத் நகர் மற்றும் ஐயூப் கார்டன் செல்லும் பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அவதி:
இதே போன்று தற்போது காந்தி ரோட்டில் அமைக்கப்பட்டு வரும் வாய்க்கால் பணியால் மேயர் முத்துப்பிள்ளை பாதை, பரகத் நகரின் டேங்க் ரோடு பாதை, பரகத் நகர் மெயின் ரோடு பாதை, மற்றும் ஐயூப் கார்டன் பாதை போன்ற பாதைகள் தடைபட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
அவர்களின் வாகனங்களை வீட்டிற்குள் விடாமல் ரோட்டியிலேயே விட்டுச் செல்வதால் மிகவும் அச்சத்தில் உள்ளார்கள்.
ஆகையால் இப்பகுதி மக்கள் கடந்த ஒரு மாத காலமாகவே தங்கள் இல்லங்களுக்கு செல்ல பெரும் பகீரத முயற்சி எடுத்துக்கொண்டு சென்று வருகிறார்கள். இப்பணிகளை விரைந்து முடித்து அவர்களுக்கு வழியை சரி செய்து கொடுக்கவும் கோரிக்கை வைக்கப்படுகிறது.
கொரானா காலத்தில் மக்கள் பலவிதமான நெருக்கடிக்கு ஆளாகிய நிலையில், இதுபோன்ற நெருக்கடிகளினாலும் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பத்தையும் வலியுறுத்தப்படுகிறது.
புகைப்படங்கள்:
மேலும் உங்களது கருத்துகளை கமெண்டில் தெரிவிக்கலாம்.