25.9 C
கோட்டக்குப்பம்
November 23, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் – காந்தி ரோட்டில் இருபுறமும் ஒரே நேரத்தில் நடைபாதை அமைக்கும் பணியால் மக்கள் மற்றும் வியாபாரிகள் அவதி.

கோட்டக்குப்பம் காந்தி ரோடு மேற்கு பகுதியில், கோட்டக்குப்பம் – முத்தியால்பேட்டை எல்லையிலிருந்து கோட்டக்குப்பம் ஆர்ச்சி வரை வாய்க்கால் அமைக்கும் பணிகள் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வருகிறது.

அதற்காக சுமார் 6 அடி ஆழத்தில் 10 அடி அகலத்தில் பள்ளம் எடுக்கப்பட்டு அதில் வாய்க்கால் அமைக்கும் பணி ஐந்து மாதங்களுக்குப் பிறகு தற்போதுதான் முடிந்துள்ள நிலையில் வாய்க்காலை ஒட்டி நடைபாதை கற்கள் பதிக்கும் பணிக்காக அதை ஒட்டி பள்ளம் எடுக்கப்பட்டு அதற்காக ஜல்லி கொட்டப்பட்டு வருகிறது.

மேற்சொன்ன இந்த பணிகள் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகள், இதுநாள் வரையில் முடியாத நிலையில் இதற்காக எடுத்த பள்ளம் மூடப்படாத நிலையில், இதற்காகவே அப்பகுதியில் தற்போது வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது அதே ரூட்டில் கிழக்குப் பகுதியில் நடைபாதை கற்கள் பதிக்க சுமார் ஐந்து அடி அகலத்தில் பள்ளங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு பகுதியில் நடைபெற்ற வேலையிலேயே போக்குவரத்தை நெரிசல் ஏற்பட்ட நிலையில் தற்போது மற்றொரு பகுதியிலும் வேலை தொடங்கியுள்ளார்கள்.

கிழக்குப் பகுதியில் வேலையை தொடங்கிய நிலையில் அதற்காக ஜேசிபி இயந்திரங்கள் பள்ளம் எடுப்பதும், எடுத்த மண்ணை கொண்டுசெல்ல அதை ஒட்டி லாரிகள் நிறுத்தப்பட்ட நிலையில் போக்குவரத்து நெருக்கடி கடுமையாக உள்ளது.

ஒரு பகுதி முழுவதும் வேலைகள் நிறைவு பெற்ற நிலையில் அடுத்த பகுதியை தொடங்காமல் ஒரு பகுதியை வேலை முடிக்காமலேயே மறுபகுதியை வேலை தொடங்க இருப்பதால் காந்தி ரோடு பொதுமக்களும், வியாபாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த வேலையைச் செய்பவர்கள் பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு உடனடியாக முடிப்பதற்கான அனைத்துத் திட்டமிடலையும் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் 150-வது ஆண்டு முப்பெரும் விழா அழைப்பு 

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா கூட்டு குர்பானி 2021 அறிவிப்பு…

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பேரூராட்சியில் தேசியக் கொடி ஏற்றினார் செயல் அலுவலர் இராமலிங்கம்.

டைம்ஸ் குழு

Leave a Comment