27.6 C
கோட்டக்குப்பம்
April 4, 2025
Kottakuppam Times
கல்வி

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியீடு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியீடு! தமிழக அரசு அறிவிப்பு.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால் தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தன. மாணவர்களும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மாணவர்களின் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


10-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு
https://tnresults.nic.in,
https://dge1.tn.nic.in,
https://dge2.tn.nic.in

ஆகிய இணையதளங்களிலும், SMS மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியாகிறது என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

ஐ.ஏ.எஸ்.,இலவச பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆன்லைன் வகுப்பு கிடையாது; டிவி மூலமாக வகுப்பு! – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

செப்.,17 முதல் இன்ஜினியரிங் கவுன்சிலிங்: இன்று முதல் பதிவு செய்யலாம்

Leave a Comment