இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் வாகனத்தில் பின்னால் அமர்திக்கும் அனைவரும் கட்டாய ஹெல்மெட் (தலைகவசம்) அணியவேண்டும் என்று உயர்நீதி மன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் ஹெல்மெட் வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் இந்த உத்தரவு கோட்டகுப்பத்திலும் இன்று அமலுக்கு வந்தது. அதன்படி இன்று காலை முதல் காவல் துறையினர் கோட்குப்பம் எம்ஜி ரோடு மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி செல்பவர்களை நிறுத்து ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும் என்றும் வலியுறுத்தி ஹெல்மெட் அணியதவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பாதுகாப்புடன் நாம் வாகனம் ஓட்ட வேண்டும் என்றும் சாலை பயணத்தில் நம்முடைய உயிர் பாதுகாத்துகொள்வதற்காவும் அரசு பிரபித்துள்ள உத்திரவை நம்முடைய பாதுகாப்பு கருதி நாம் அனைவரும் ஹெல்மெட் அணிந்த வாகனம் ஓட்டுவோம். நம்முடைய நலன் கருதி பிரபிக்கப்பட்டுள்ள உத்தரவை நாம் மதித்து நடப்போம்.