24-10-2020, சனிக்கிழமை., இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கோட்டக்குப்பம் கிளை மற்றும் கோட்டக்குப்பம் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் “மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாம்”, கோட்டக்குப்பம் அங்கன்வாடி மையத்தில் வானூர் வட்டாட்சியர் திரு. சங்கரலிங்கம், விழுப்புரம் மாவட்ட திட்ட அலுவலர் டாக்டர்.விவேக் தலைமையில் நடைபெற்றது.
இதில் டிஎஸ்பி அஜய் தங்கம், வானூர் வட்ட மருத்துவர் டாக்டர்.ஜெய்பிரகாஷ், செயல் அலுவலர் ராமலிங்கம், குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். ரெட் கிராஸ் சேர்மேன் அப்துல் ரஷீத், பொருளாளர் பாயிஸ், யாசின், சபிர், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பெண்கள் திரளாக கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
Related posts
Click to comment