புதுச்சேரியை அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்.
இந்த கிராமத்தில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் 80 க்கும் மேற்பட்டோர் படகுகளை வைத்து மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு இயற்கை சீற்றத்தின் போது இந்த மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக வைக்க இடமில்லை என்பது குற்றச்சாட்டு.
இயற்கை பேரிடர் காலத்தில் படகுகளை அருகில் உள்ள சுடுகாட்டில் தான் நிறுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. தற்போது இந்த பகுதியில் இறப்பு நிகழ்ச்சி ஒன்று நடப்பதால் சுடுகாட்டில் படகுகளை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. படகுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான இடத்தை கேட்டு இவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி உதவி – சாதிக் ரஷீத்.