Kottakuppam Times
செய்திகள் பிற செய்திகள்

மரக்காணம் அருகே நள்ளிரவில் கரையை கடக்கும் நிவர் புயல்! முழுவதும் கடக்க நாளை காலை 10 மணியாகும்!

வங்க கடலில் உருவாகி உள்ள அதிதீவிர நிவர் புயல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அலம்பரை என்ற கிராமத்தின் அருகே நள்ளிரவில் கரையை கடக்கும் என்றும் இந்த புயல் முழுவதும் கரையை கடக்க நாளை காலை 10 மணி ஆகும் எனவும் வானிலை மைய அதிகாரிகள் கணித்துள்ளனர்.

இதுகுறித்து வானிலை மையம் கூறுகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்- செய்யூர் அருகே அலம்பரை என்ற கிராமத்தின் அருகே புயல் கரையை கடக்கும். இதுவரை16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி வந்த புயல் தற்போது வேகம் குறைந்து 12 கி.மீ வேகத்தில் வருகிறது.

இரவு 11 மணிக்கு புயலின் கண் பகுதி கரையை தொடும். அதிகாலை 3 மணிக்கு புயலின் கண் பகுதி கரையை கடக்கும். புயல் முழுமையாக கரையை கடக்க காலை 10 மணி ஆகலாம். புயல் கரையை கடக்கும்போது வலுப்பெறும்.

மரக்காணத்தில் புயல் கரையை கடக்கும் போது மரக்காணத்தில் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புயல் காரைக்கால் – மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டது. இதையடுத்து காற்றின் அழுத்தம் குறைவாக இருந்ததால் புதுவை அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டது.

எனினும் புயல் சரியாக எங்கே கரையை கடக்கும் என்பது அது நெருங்கும் போதுதான் தெரியும் என கூறினார்கள். இரவுக்கு மேல் கரையை கடக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இது அதிகாலைதான் கரையை கடக்கும் என தெரிகிறது. புயல் கரையை கடந்து 6 மணி நேரம் வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை நெருங்க நெருங்க கடலூர், விழுப்புரம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சூறைக்காற்றும் வீசி வருகிறது. பெரும்பாலான இடங்களில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. எனவே காரைக்கால்- மாமல்லபுரம் இடையே உள்ள நிலப்பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் ஹஜ் பெருநாள் தொழுகை பற்றிய அறிவிப்பு.

மகளிர் தொழில் முனைவோர் கண்காட்சி மற்றும் விற்பனை…

பெருநாள் தொழுகையை பரிபூரணமாக நிறைவேற்ற வசதி செய்து தருமா ஜாமிஆ மஸ்ஜித்?

Leave a Comment