நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை கோட்டக்குப்பம் பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
அதனால் குடிநீர் வினியோகம் கடந்த இரண்டு நாட்களாக தடைப்பட்டிருந்தது.
புயல் கரையை கடந்த நிலையில் புதன், வியாழன் மற்றும் வெள்ளி வரை குடிநீர் வினியோகம் பர்கத் நகர் பகுதியில் செய்யப்படவில்லை.
வெள்ளிக்கிழமை, காலை 12 மணி வரை குடிநீர் வினியோகம் இல்லாததை கண்டித்து அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தார்கள்.
மின் வினியோகம் வியாழக்கிழமை இரவே கொடுத்துவிட்டு நிலையில் குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் மிகவும் ஆத்திரப் பட்டார்கள்.
இதனை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணி அளவில் பரக்கத் நகர் வாசிகள் அனைவரும் கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றத்தில் முற்றுகையிட்டு இதுவரையில் ஏன் குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று செயல் அலுவலர் அவர்களிடம் கேட்டனர்.
அதற்கு அவர் குடிநீர் வழங்க மின்வினியோகம் அப்பகுதியில் சரியாக இல்லாததால் அதை சரி செய்து நடவடிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
வெள்ளிக்கிழமை மாலை நிச்சயமாக குடிநீர் வினியோகம் வழங்கப்படும் என்று கூறினார்.
மேலும் குடிநீர் வினியோக பொறுப்பாளர் ஒருவர் சரியான முறையில் இதற்கான பதில்களை அளிக்காமலும், குடிநீர் வினியோகத்தை சீர் செய்யாமலும் அலட்சியமாக நடந்து கொண்டிருப்பதால் அவரை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
பர்கத் நகர் மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
செயல் அலுவலர் அவர்களின் உறுதிமொழியை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.