விழுப்புரம் மாவட்டத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டது. இதனை எடுத்து, கரோனா தோற்று குறைந்து வருவதையடுத்து, பொது முடக்கம் தளர்வு செய்யப்பட்டு, கடந்த டிச 2-ஆம் தேதி முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின. தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை) கலை அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங், வேளாண்மை, மீன்வளம், கால்நடை மருத்துவகல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகளும், அவர்களுக்கான விடுதிகளும் தொடங்கப்பட்டது.
கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அந்த வகையில் மாணவ, மாணவிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் திங்கள்கிழமை சுத்தம் செய்து, வகுப்பறைகள் கிருமி நாசினி தெறித்து மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.
விழுப்புரம் அரசு அண்ணா கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் கல்லூரி வளாகம் முன்பு நின்று, காய்ச்சல் பரிசோதனை செய்து வகுப்பறையில் செல்ல அனுமதித்தனர. விருப்பப்பட்ட மாணவர்கள் வரலாம் என கூறப்பட்டதால் 50 சதவீத மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.