கோட்டக்குப்பம் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் குறிப்பாக கோட்டக்குப்பம் பழையா பட்டணப்பாதை, M.G. ரோடு, பர்கத் நகர் போன்ற பல பகுதிகளில், தினமும் காலை மாலை நேரங்களில், கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்பவர்கள், பரபரப்புடன் வாகனங்களில் செல்லும்போது கால்நடைகள் சாலைகளை ஆக்கிரமித்தபடி வலம் வருகின்றன. அதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. சில இடங்களில் சாலையில் நடுவில் மாடுகள் படுத்துக் கிடக்கின்றன.
சாலைகளில் செல்லும் மாடுகள் திடீரென ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு அங்குமிங்கும் ஓடுவதால், அவ்வழியாக செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிடோர் அச்சத்துடன் அலறியடித்து நடுங்குகிறார்கள். குறிப்பாக, இரவு நேரங்களில் சாலையின் நடுவில் படுத்துக் கிடக்கும் மாடுகளைக்கண்டு இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் திடீரென பிரேக் அடிப்பது, பக்கவாட்டில் செல்வது போன்ற காரணங்களாலும் விபத்துகள் எற்பட வாய்ப்புள்ளது.
இதனால், கால்நடைகளை வளர்ப்பவர்களை அவற்றை உரிய கவனத்துடன் பராமரிக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்று கோட்டக்குப்பம் பேரூராட்சியை மக்கள் கேட்டு கொள்கின்றனர்.