29 C
கோட்டக்குப்பம்
April 19, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா….

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் இன்று 11-12- 21 திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

அறுவடை திருநாளான, தமிழர் திருநாளான, அனைத்திற்கும் நன்றி கூறும் பெரு விழாவான பொங்கல் திருவிழாவை போற்றும் வண்ணம் அனைத்து இனத்தினரும் கலந்துகொள்ளும் சமத்துவ பொங்கலாக இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பொங்கல் விழாவில் கலந்து கொண்ட கோட்டகுப்பம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கலை போற்றும் வண்ணம் இனிப்பு கரும்புகள் வழங்கப்பட்டது.

மேலும் பொங்கலிட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் திரு ராமலிங்கம் அவர்களும், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு சரவணன் அவர்களும், கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் அப்துல் ஹமீது மற்றும் ஜெயமூர்த்தி அவர்களும், கோட்டக்குப்பம் அமர் பல் கிளினிக் டாக்டர் திரு அமர் ராஜா அவர்களும், கோட்டக்குப்பம் எம்ஜி ரோடு வணிகர் சங்க தலைவர் நஜீர் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் முபாரக் அவர்கள் தலைமை தாங்க, சங்க செயலாளர் அப்துல் ரவூப் அவர்கள் ஒருங்கிணைக்க, சங்க பொருளாளர் வேல்முருகன் அவர்கள் வரவேற்க, சங்க கௌரவத் தலைவர் சாகுல் அமீது மற்றும் மக்கள் தொடர்பாளர் அமீர் பாஷா அவர்கள் வாழ்த்திப் பேசினார்கள்.

இறுதியாக சங்க துணைச் செயலாளர் பிலால் முஹம்மது நன்றியுரை கூற முடிவுற்றது.

நிகழ்ச்சியில் சங்கத்தின் உயர்மட்டக்குழு, செயற்குழு, ஆலோசனைக் குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் 78-வது சுதந்திர தின விழா.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் மசூதிகளே இல்லையா?

கோட்டக்குப்பம் அருகே கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

டைம்ஸ் குழு

Leave a Comment