April 20, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக இன்று 72 ஆவது குடியரசு தின நிகழ்ச்சி..

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக இன்று 72 ஆவது குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நிர்வாகிகள் செய்திருக்க நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹமீத் அவர்கள் தேசியக்கொடி ஏற்ற ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது பாரூக், கௌரவ முத்தவல்லி இஹ்சானுல்லாஹ் அவர்கள் பரகத் நகர் முத்தவல்லி பஷீர் அஹமது ஆகியோர் வாழ்த்துரை வழங்க இணை முத்தவல்லி பிலால் முஹம்மது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பள்ளிவாசல் இமாம் அக்பர் ஹஜ்ரத் அவர்கள் துவா ஓதினார்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளிவாசல் செயலாளர் முஹம்மது இபுராஹிம் பள்ளிவாசல் பொருளாளர் அப்துல் நாசர் அவர்கள் மற்றும் துணை செயலாளர் முகம்மது சரிப் அவர்கள் செய்திருந்தார்கள்.

நிகழ்ச்சியில் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகிகள் முஹம்மது பாரூக், அமீர் பாஷா, அப்துல் ரவூப், முகமது இஸ்மாயில், சேட்டு என்கிற சர்புதீன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அத்துடன் தீனியாத் மக்தப் மதரஸா நிர்வாகிகள் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் மற்றும் தமுமுக, முஸ்லிம் லீக் திமுக, காங்கிரஸ் ஆகிய இயக்கங்களின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி கோட்டகுப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கலைஞர் நினைவு தினம்: கோட்டக்குப்பம் 14-வது வார்டு திமுக சார்பில் மலர் மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கல்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக 340 பயனாளிகளுக்கு பெருநாள் அன்பளிப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment