இந்திய அஞ்சல் துறை மற்றும் கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பில் ஆதார் சிறப்பு முகாம் பெரிய பள்ளிவசால் அருகில் உள்ள சௌக்கத்துள் இஸ்லாம் மதரஸாவில் தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த முகாம் இன்று(பிப்ரவரி 15), நாளை(பிப்ரவரி 16) மற்றும் நாளை மறுநாள்(பிப்ரவரி 17), காலை 10-மணி முதல் மாலை 5-மணி வரை நடைபெறும்.
எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதியதாக ஆதார் பதிவு, முகவரி, புகைப்படம், பெயர், பாலினம், பிறந்த தேதி, கைபேசி எண், மின்னஞ்சல் திருத்தம், 5 மற்றும் 15வது வயதில் பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்கின்றனர். இதை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.