கோட்டக்குப்பம், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. அடுத்த சில மணி நேரங்களில் பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.
இதேபோல் புதுச்சேரி பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. சில குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் உள்ளே புகுந்துள்ளது. இதனை, சரி செய்யும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கோட்டகுப்பம் பகுதி புகைப்படங்கள்
புதுச்சேரி பகுதி புகைப்படங்கள்