மக்களின் சகோதரத்துவம். அனைவருடன் இணைந்து வாழும் போக்கும், ஒரே சமுதாய மக்கள் பல கருத்துக்களை தன்னுள்ளே கொண்டிருந்தாலும் கருத்து வேறுபாடுகளை வெளியிட்டு பிரச்சனைகளை ஏற்படுத்தாத தன்மை இவை அனைத்தும் ஊரின் ஒற்றுமையை கருதி, ஒரு ஊரில் ஒருங்கே அமையப்பெற்றிருப்பது சிறப்புக்குரியது. ஆச்சரியமானது.
மேலே சொன்ன இந்த அம்சங்கள் சிறப்புடன் அமையப்பெற்றதே விழுப்புரம் மாவட்டம். வானூர் வட்டம். கோட்டக்குப்பம் (புதுச்சேரி அருகில்) என்னும் கிராமம். கோட்டகுப்பம் இஸ்லாமியர்கள், வன்னியர்கள், மீனவர்கள், ஆதிதிராவிடர்கள் மற்றும் பல பிரிவினர்கள் வாழும் பகுதியாக இருந்து வருகிறது. இதில் இந்துக்களும். முஸ்லிம்களும் சரிபாதியாக மக்கள் தொகைய எண்ணிக்கையில் உள்ளனர். இருதரப்பினரும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் தங்களுக்குள் இணைந்து சகோதரபாசத்துடன் நடத்தி வருவது இந்த நாட்டிற்கே ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
இஸ்லாமியர் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு குடியேறி வந்துள்ளதாக ஆய்வாலர்கள் கூறுகிறார்கள். 300 ஆண்டுகளுக்கு முன் ஒரு சில குடும்பத்தினர் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து வந்து இங்கு குடியேறி இப்பொழுது உள்ள பெரிய தெரு, பள்ளிவாசல் தெரு, காஜியார் தெரு, நாட்டாண்மை தெரு, ஹாஜி உசேன் தெரு, போன்ற தர்காவை சுற்றி உள்ள இடங்களில் குடியேறி உள்ளனர். அவ்வாறு குடியேறியவர்கள் இறைவணக்க வழிபாடுகளுக்கு ஒரு பள்ளிவாசலை உருவாக்கி அதில் தொழுகை நடத்தி வந்துள்ளார்கள். ஆரம்ப காலங்களில் கூரை அமைத்து தொழுகை நடத்தி வந்தவர்கள், ஆர்காடு நவாப் அவர்களின் முயற்சியால் கருங்கல் கட்டிடமாக கட்டப்பட்டு அது ஜாமிஆ மஸ்ஜித் டிரஸ்ட் என்னும் பெயரில் ஒரு ஜமாத்தாக செயல்பட்டு வந்துள்ளது. அதில் உள்ள ஒரு குழுவினர் சில கருந்து வேறுபாடுகள் ஏற்பட்டு தற்பொழுது உள்ள பழையபட்டினம் பாதை ரவ்னக்குல் இஸ்லாம் மதரஸாவை தலைமையிடமாக கொண்டு இன்னொரு ஜமாத்தாக செயல்பட்டு தனி திருமண பதிவேடுகள், தனி பஞ்சாயத்துக்கள். தர்கா சந்தனகூடு போன்ற வேலைகளை செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சந்தன கூடு போன்ற வேலைகளை செய்யக்கூடாது என சில ஆலிம்கள் பிரச்சாரங்கள் செய்ததின் அடிப்படையில் இரு ஜமாத்தினரும் சேர்நது பேசி ஒரே ஜமாத்தாக இணைந்து தற்போது உள்ள ஜாமிஆ மஸ்ஜித் ஜமாத் என்று ஒரே ஜமாத்தாக மாற்றப்பட்டுள்ளது. இணைப்பிற்கு பின் ஊர் மக்களின் முழு ஒத்துழைப்புடன் பெரும் முயற்சியால் தற்பொழுது உள்ள பள்ளிவாசல் கட்டிடம் 1972-ம் ஆண்டு கட்டப்பட்டது.
வியாபாரிகள் தங்களின் தொழுகைகளை நிறைவேற்ற வியாபாரத்தளங்களின் அருகில் ஒரு பள்ளியை உருவாக்க முயற்சி செய்து அதன் பலனாக தற்பொழுது காந்திரோட்டில் உள்ள புஸ்தானிய்யா பள்ளிவாசலை உருவாக்கி அதில் தங்களின் இறைவணக்க கடமைகளை செய்து வந்தனர். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஜாமிஆ மஸ்ஜித் மற்றும் புஸ்தானிய்யா ஆகிய இரண்டு பள்ளிவாசல் மட்டும் இருந்து நிலையில் சின்னகோட்டக்குப்பம், இந்திராநகர், ரஹமத் நகர், பரகத்நகர், ஜமியத் நகர், மரைக்காயர் தோப்பு சமரசம் நகர், போன்ற புதிய இடங்களில் மஹல்லாக்கள் உருவாகி புதிய பள்ளிவாசல்கள் உருவாகின. இவ்வாறாக தற்பொழுது 11 பள்ளிவாசல்கள் உருவாகி இருக்கிறது.
தமிழகத்தில் அதிக அளவில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் ஒரே ஊரில் பல பள்ளிவாசல்கள் உருவாகி அவை அனைத்து தனிதனி ஜமாத்தாக செயல்பட்டு வருவார்கள். ஒரு மஹல்லா ஜமாத்தினர் அதே ஊாரை சேரந்த வேறு ஒரு மஹல்லா ஜமாத்தினருடன் இணைந்து செயல்படமால் தனித்தனியா செயல்படுவார்கள். திருமணங்கள் விசாரணைகள் தனித்தனியாக நடைபெறும் இதனால் பல குழப்பங்கள் விளைந்துவருகிறது.
இப்படிபட்ட குழப்பங்கள் இல்லாமல் கோட்டக்குப்பம் பகுதியில் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலை சுற்றி 10 மஹல்லா பள்ளிவாசல்கள் உருவாகி அனைத்து மஹல்லா பள்ளி ஜமாத்தார்களும் ஜாமிஆ மஸ்ஜித் என்னும் பெரிய ஜமாத்திற்கு எல்லா காரியங்களிலும் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் செயல்படுவதும். 10 பள்ளிவாசல் ஜமாத்தினரின் அனைத்து நல் ஆலோசனைகளை ஏற்று ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் செயல்படுவதும் சிறப்பிக்குரியது.
கோட்டகுப்பம் ஊர் உருவாகி சுமார் 300 ஆண்டுகள் கடந்தாலும். ஜாமிஆ மஸ்ஜித் கட்டிடம் கட்டப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளதாக கல்வெட்டு பதிவு தெரிவிக்கிறது. அதன் அடிப்படையில் இன்று 150-ம் ஆண்டில் பாரம்பரிய விழாவை கோட்டக்குப்பம் ஜமாத் கொண்டாடுகிறது.
ஒரு வீட்டுக்குள் வசிக்கும் அண்ணன் தம்பிகள் பங்காளி சண்டை போட்டுக்கொள்ளும் நாட்டில், 11 பள்ளிவாசல் மஹல்லா ஜமாத்தினரும் ஒரே கூட்டாக செயல்படுவது ஒரு சாதாரண நடவடிக்கையாக எடுத்துக்கொள்ள முடியாது. அனைத்து மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல், அனைவரின் எண்ண ஓட்டம் ஒன்றாக இல்லாமல் இந்த ஒற்றுமை சாத்தியமில்லை. யாருடை நிர்பந்தத்தின் காரணமாகவோ அல்லது அடக்குமுறையின் காரணமாகவோ ஜாமிஆ மஸ்ஜித் என்னும் ஜமாத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. பெரியோர்களின் சரியான வழிகாட்டுதலை பின்பற்றி இன்றுவரை செயல்பட்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் நடைபெறும் இந்த பாரம்பரிய நிகழ்வு நிச்சயமாக வீண் விரயம் என்று கூறமுடியாது. காலத்தின் கட்டாயம் என்ற கூறவேண்டும்.
நமது ஒரே கோரிக்கை சிறப்பு மிக்க இவ்விழாவில் நமக்காக உழைத்த, உழைக்க தயாராக இருக்கும் அனைவரையும் இணைத்து அனைவரின் ஆதரவு பெற்று ஊர் பெருவிழாவாக நடத்த வேண்டும்.
முன்னாள் மூத்த உறுப்பினர்கள், பல இளைஞர்கள் சிறு மன வருத்த்தில் உள்ளதுபோன்ற ஒரு கருத்து நிலவுகிறது. அவர்களின் மன வருத்தத்தை போக்கும்வண்ணம் அனைவரையும் அழைத்து நமது முன்னோர்கள் காட்டிச்சென்ற வழியில் சென்று சொந்த விருப்பு வெறுப்பின்றி ஒருங்கிணைத்து இந்த பாரம்பரிய விழாவை சிறப்புடன் நடத்த வேண்டும்.
விழா நடைபெறும் அன்றைய தினம் நம்முடைய வியாபார நிறுவனங்களை அடைத்து. நம்முடைய நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்து தார்மீக ரீதிதாக முழு ஆதரவை நாம் அனைவரும் தரவேண்டும்.
சிலர் சொல்வது போல் இந்நிகழ்வு
வீண் விரயமல்ல!
விரும்பி செய்ய வேண்டிய காரியம்!
ஊர் பாரம்பரியத்தை போற்றுவோம்,
-குப்பத்து மைந்தன்