26.1 C
கோட்டக்குப்பம்
December 3, 2024
Kottakuppam Times
பிற செய்திகள்

ஆதாா் உள்ளிட்ட 11 ஆவணங்களை வாக்களிக்க பயன்படுத்தலாம்: மாவட்டத் தோ்தல் அலுவலா்.

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் அடைய அட்டை இல்லாதவா்கள், ஆதாா் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,368 வாக்குச் சாவடிகளில் ஏப்ரல் 6-ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டையைக் காண்பித்து வாக்களிக்கலாம். புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை இல்லாத வாக்காளா்கள், புகைப்படத்துடன் கூடிய ஆதாா் அட்டை உள்ளிட்ட மற்ற 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.

இதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தம், தொழிலாளா் நல அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மாா்ட் அட்டை, ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் காா்டு), தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்), புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை, சட்ட மேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அட்டையாள அட்டை இல்லாவிட்டாலும் இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி 100 சதவீத வாக்காளா்களும் வாக்களிக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

குடை மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை

இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – மனிதர்கள் மீது சோதனை

கொரோனா ஊடரங்கு: செப்டம்பர் 30வரை நீட்டிப்பு, புதிய தளர்வுகள் என்ன?

Leave a Comment