விழுப்புரம் மாவட்டத்தில் வானூா், செஞ்சி, மயிலம், திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 12-இல் தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 20-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 7 தொகுதிகளிலும் 105 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
வேட்பு மனுக்களை திரும்பப் பெற திங்கள்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செஞ்சி, வானூா், திருக்கோவிலூா் ஆகிய மூன்று தொகுதிகளில் தலா ஒரு சுயேச்சை என 3 போ் தங்களது மனுக்களை திரும்பப்பெற்றனா். இதையடுத்து, இறுதி வேட்பாளா்கள் பட்டியல் அந்தந்த தொகுதிகளில் வெளியிடப்பட்டு, வேட்பாளா்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில் நம் வானூர் தொகுதியில் சென்ற வருடம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், இந்த வருடம் வெறும் 7 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன் விவரம்:
புகைப்படம் | கட்சி பெயர் | சின்னம் |
விடுதலை சிறுத்தைகள் கட்சி | ||
சக்கரபாணி | அதிமுக | |
லட்சமி | நாம் தமிழர் கட்சி | |
கணபதி | தே.மு.தி.க | |
சந்தோஷ்குமார் | மக்கள் நீதி மையம் | |
விநாயகமூர்த்தி | பகுஜன் சமாஜ் பார்ட்டி | |
சக்திவேல் | சுயேச்சை |