34.2 C
கோட்டக்குப்பம்
April 19, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக பானை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக வானூர் தொகுதி கோட்டகுப்பத்தில் பானை சின்னத்தில் வாக்கு சேகரிக்கப்பட்டது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியின் சார்பாக பிரச்சாரம் இன்று தொடங்கியது.

வானூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வன்னி அரசு அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்கு கேட்டு இன்று கோட்டக்குப்பத்தில் அனைத்து கட்சியின் சார்பாக கோட்டக்குப்பம் பஜார் வீதி, சல்மான் மஸ்ஜிதில் இருந்து புறப்பட்டு தேவி தியேட்டர், புதுத்தெரு, உமறுப்புலவர் தெரு, வேங்கை தெரு, மாமுலப்பை தெரு, பெரிய தெரு, காஜியார் தெரு, பள்ளிவாசல் வீதி, நாட்டாண்மை தெரு, மற்றும் ஆசாத் தெரு ஆகிய தெருக்களில் உள்ள வீடுகளில் இன்று பானை சின்னத்தை அறிமுகம் செய்து வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் உள்ளடக்கிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய கல்யாணராமன்மனை கண்டித்து கோட்டக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டக்குப்பதின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

கோட்டக்குப்பத்தில் நவீன தானியங்கி தெரு விளக்குகள் அமைப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment