இரண்டாம் கட்டமாக கொரோனா இந்தியாவில் பரவிவரும் நிலையில் கோட்டக்குப்பதில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் இன்று கோட்டக்குப்பம் அரசு மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ‘கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்’ என்று வட்டார மருத்துவ அலுவலர் Dr. ஜெயபிரகாஷ் மற்றும் காவல் ஆய்வாளர் சரவணன் எடுத்து கூறினார்கள். இவர்களுடன் பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரவி ஆகியோர் கலந்துக்கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கருத்துக் கூறினார்கள்.
நிகழ்வின் முடிவில் அனைத்து வியாபார சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் மூலம் அந்தத் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்துவரும் தயக்கம் குறையும் என்று தெரிவித்தனா். எனவே, அனைவரும் கொரானா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் வைத்தனர்.
மேலும், கொரோனா தடுப்பூசி கோட்டக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தாந்திராயன்குப்பத்தில், தினமும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .