34.2 C
கோட்டக்குப்பம்
April 19, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து கோட்டகுப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைமை நிலைய உத்தரவுக்கு இணங்க பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் அடாவடித்தனத்தையும் ஆக்கிரமிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி கோட்டகுப்பத்தில் நகர நிர்வாகிகள் இஸ்ரேல் அரசை கண்டித்தும் பாலஸ்தீன விவகாரத்தில் இந்திய அரசு தலையிட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட முஸ்லீம் லீக் தலைவர் வி ஆர் முஹம்மது இப்ராஹிம் தலைமையில் நகர தலைவர் இஹ்சானுல்லாஹ் முன்னிலையிலும் நகர செயலாளர் முகமது பாரூக், மாவட்ட துணைச் செயலாளர் அமீர் பாஷா, மாவட்ட இளைஞரணி தலைவர் பிலால் முஹம்மத், நகர துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் முகமது அலி ரஃபிக், நகர இளைஞரணி தலைவர் அமீன், செயலாளர் தீன் நகர இளைஞரணி பொறுப்பாளர் கரீம் மூத்த நிர்வாகி முகம்மது உசேன் மற்றும் பஹருள் இஸ்லாம் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

மஸ்ஜிதுர் ரஹ்மானிய்யா வல் மத்ரஸா(பட்டினத்தார் தெரு) மேல் தளம் விஸ்தரிப்பு திறப்பு விழா

கோட்டக்குப்பத்தில் லேசான இடியுடன் கூடிய மழை.

கோட்டக்குப்பத்தில் E.B-பில் அதிகப்படியாக கணக்கிடப்படுகிறதா? உண்மை நிலவரம் என்ன?

Leave a Comment