‘கொரோனா’ வராமல் தடுக்கவும், வந்தால் அதிலிருந்து மீளவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் பேருதவியாக இருப்பதாக கருதி தமிழக அரசு, அதைப் பொதுமக்களுக்கு வழங்க பரிந்துரை செய்தது.
அதனடிப்படையில், கோட்டக்குப்பம் பேரூராட்சியின் 14-வது வார்டு தி.மு.க பிரமுகர் A.R. சாதிக் பாஷா ஏற்பாட்டில், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஜெயமூர்த்தி, ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி பாரூக் முன்னிலையில் 14-வது வார்டு பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பிரதி நிதி பஷீர், நகர அவை தலைவர் முகமது அலி, நகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வழக்கறிஞர் ஜாக்கீர் உசேன், சிறப்பு அழைப்பாளர்களாக ஜாமிஆ மஸ்ஜித் செயலாளர் பாரூக், ஜாமிஆ மஸ்ஜித் பொருளாளர் S.M.J அமீன், காங்கிரஸ் மாவட்ட விவசாய அணி தலைவர் முஜிபுர் ரஹ்மன், கிம்ஸ் நிர்வாகிகள் – வக்கீல், கமால், ஷாகுல் மற்றும் கழக நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.