ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் வழிகாட்டியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாபெரும் தலைவருமாகிய கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 126-வது பிறந்த நாளை முன்னிட்டு முஸ்லிம்லீக் கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி கோட்டக்குப்பம் முஸ்லிம் லீக் சார்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக கோட்டக்குப்பம் காயிதே மில்லத் வளைவு அருகில் முஸ்லிம் லீக்கின் பிறைக் கொடி ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோட்டக்குப்பம் குட்டவாப்பு, மோர்சார் தெரு சந்திப்பில் நகர இளைஞரணி சார்பாக முஸ்லிம் லீக் கொடி ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஏழை குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை ஏழைகளுக்கு இன்று வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் வி ஆர் முஹம்மது இப்ராஹிம், நகர தலைவர் இஹ்சானுல்லாஹ், நகர செயலாளர் முஹம்மது பாரூக், விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிலால் முஹம்மத், விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் அமீர் பாஷா, நகர துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மாநில இளைஞரணி செயலாளர் முஹம்மது இலியாஸ், நகர இளைஞரணி தலைவர் அமீன்,
நகர இளைஞரணி செயலாளர் தீன், நகர இளைஞரணி பொறுப்பாளர் அப்துல் கரீம், மாவட்ட MSF பொறுப்பாளர்கள் முகமது ரபிக், முகமது அலி, முகமது உசேன், நகர MSF பொறுப்பாளர்கள் ஹாஜாத் அலி, சேட்டு, நகர துணை செயலாளர் ஹாமிது பாஷா,
நகர தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் நூருல் அமீன், இனாயத்துல்லா, ரப்பானியா அரபிக்கல்லூரி செயலாளர் முஸ்தபா, நகர பொருளாளர் கமால் முஸ்தபா, நகர இளைஞரணி முன்னாள் தலைவர் உபயதுல்லா,
நகர இளைஞர் அணி பொறுப்பாளர்கள் வாஹித், இம்ரான், உபைத், அப்பாஸ், மசூதி, மூஸா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சுலைமான்,
நகர மூத்த உறுப்பினர்கள் முஹம்மது உசேன் ஜக்கரியா மற்றும் தாய்ச்சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் நகர உலமாக்கள் அணி பொறுப்பாளர்கள் மவுலவி ஹாமீம் பாஷா ரப்பானி அவர்களும் மௌலவி முஹம்மது யஹ்யா ரப்பானி அவர்களும் துவா ஓதி சிறப்பித்தார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள், பிஸ்கெட் பாக்கெட் வழங்கப்பட்டது.