கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை KIET மற்றும் ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் YMJ கோட்டகுப்பம் சார்பாக கோட்டகுப்பம் உட்பட்ட 18 வார்டுகளிலும் தொடர்ச்சியாக 23 நாட்களாக அனைத்து மக்களும் பயன் அடையும் வகையில் ஊர் முழுக்க தெரு வாரியாக சென்று கபசுற குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு கொரோனா குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதில், 35000 பேருக்கு மேல் பயனடைந்தனர். அவ்வப்போது தேவைப்படும் நபர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டு ஆரோக்கிய வாழ்வின் வழிமுறைகள் விளக்கப்பட்டது.
கசாயம் வழங்குவதன் இறுதியாக இன்று 13/06/21 ஞாயிறு காலை புகை மற்றும் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு அது குறித்த விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டது….
கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்து உள்ள இந்த நேரத்தில் இவ்வமைப்பு சார்பாக
திண்டிவனம்,
கோட்டகுப்பம்,
விழுப்புரம் பகுதிகளில்
கபசுற குடிநீர் வழங்கல்,
சாலையோர ஏழைகளுக்கு உணவு வளங்கள்,
விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்து சுமார் 70 தன்னார்வ ரத்ததான கொடையாளர்கள் மூலம் இரத்த தான உதவி,
கொரோனா தாக்கம் காரணமாக இறந்த உடல்களை அடக்கம் செய்ய களப்பணி ஆற்றல்,
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல் அமைத்தல்,
போன்ற பல்வேறு பணிகளை செவ்வனே செய்து வருகின்றனர்.
இன்று நடைபெற்ற கபசுற குடிநீர் வழங்கல் நிறைவு நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை ஆய்வாளர் ரவி துவங்கி வைத்தார். செயல் அலுவலர் ராமலிங்கம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்….
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கோட்டகுப்பம் காவல்துறை ஆய்வாளர் சரவணன் கலந்து கொண்டார்.
அப்பாஸ் YMJ விழுப்புரம் மாவட்ட தலைவர் தலைமையில்
முஹம்மது அலி
அமைப்பு பேச்சாளர் YMJ
மற்றும் தலைவர் KIET,
அப்பாஸ் YMJ கோட்டகுப்பம் கிளை செயலாளர்
ஜாஃபர் YMJ கிளை தலைவர்
யாசர் YMJ மாவட்ட பேச்சாளர்
மற்றும் KIET மாணவர் குழு தலைவர் அசைன் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் …