வெளிநாடு செல்ல இருப்பவர்கள் முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்கள், இரண்டாவது டோசை 28 நாட்களுக்கு பிறகு போடலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் சமீபகாலத்தில் அறிவிப்பு செய்தது.
அதனடிப்படையில், வெளிநாட்டு செல்ல இருப்பவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த, விழுப்புரம் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பரிந்துரையின் அடிப்படையில், “கோட்டக்குப்பம் சுகாதார ஆய்வாளர் திரு .ரவி” அவர்களை தொடர்பு கொண்டு கீழ்க்கண்ட ஆவணங்களை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
1. நிறுவனத்தின் அழைப்பு கடிதம் (Company Call Letter)
2. அடையாள சான்று (ID Proof)
3. முதல் டோஸ் செலுத்தப்பட்ட சான்றிதழ் (1st Dose Certificate).