22.9 C
கோட்டக்குப்பம்
November 22, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

நடுக்குப்பத்தில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மீனவர் பிரதிநிதிகளிடம் ரவிக்குமார் எம்.பி‌ தலைமையில்‌ கருத்து கேட்பு.

ஜூலை 19 ஆம்‌ தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்‌ தொடரில்‌ ஒன்றிய அரசு நிறைவேற்ற இருக்கும்‌ இந்திய கடல்‌ மீன்வள சட்ட மசோதா 2021 குறித்த கலந்தாய்வுக்‌ கூட்டம்‌ விழுப்புரம்‌ நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்‌ து. ரவிக்குமார்‌ தலைமையில்‌ வானூர்‌ வட்டம்‌ நடுக்குப்பம்‌ மீனவர்‌ கிராமத்தில்‌ 14.07.2021 பிற்பகல்‌ 3 மணிக்கு நடைபெற்றது.

அதில்‌ 19 மீனவ கிராமங்களைச்‌ சேர்ந்த மீனவர்‌ பிரதிநிதிகள்‌ பங்கேற்றனர்‌. சட்ட மசோதாவின்‌ உள்ளடக்கத்தை நாடாளுமன்ற உறுப்பினர்‌ ரவிக்குமார்‌ அவர்களிடம்‌ எடுத்துக்‌ கூறினார்‌. இந்த சட்டம்‌ நடைமுறைக்கு வந்தால்‌ மீன்‌ பிடிப்பதற்கு உரிமம்‌ வாங்க வேண்டும்‌, அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்‌.எக்ஸ்க்ளூஸிவ்‌ எக்கனாமிக்‌ ஜோன்‌ என கடலில்‌ குறிப்பிட்ட பகுதிகள்‌ வரையறுக்கப்படும்‌. உரிமம்‌ பெற்றவர்கள்‌ அங்குதான்‌ மீன்‌ பிடிக்க வேண்டும்‌.

இதற்கென மேற்பார்வை அதிகாரி நியமிக்கப்படுவார்‌, கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்படும்‌. இந்த சட்டத்தின்‌ பிரிவுகள்‌ 4, 9, 12, 14, 15, 16 மற்றும்‌ 20 ஆகியவற்றை மீறினால்‌ அதற்கென ரூபாய்‌ 5000 முதல்‌ 5 லட்சம்‌ வரை அபராதம்‌ விதிக்கப்படும்‌. படகும்‌ பறிமுதல்‌ செய்யப்படும்‌ – என பல அம்சங்கள்‌ இந்த சட்டத்தில்‌ உள்ளன. அவற்றையெல்லாம்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ அவரிடம்‌ எடுத்து விளக்கினார்‌.

சட்ட மசோதாவின்‌ விவரங்களைக்‌ கேட்டறிந்த மீனவப்‌ பிரதிநிதிகள்‌ தமக்கு தற்போது இருக்கும்‌ பல்வேறு சிக்கல்களையும்‌, இந்த சட்டத்தால்‌ ஏற்படும்‌ தீமைகளையும்‌ தெரிவித்தனர்‌. அதன்‌ பிறகு பின்வரும்‌ தீர்மானங்கள்‌ ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:

  1. இயற்கை பேரிடர்களாலும்‌, டீசல்‌ விலை உயர்வாலும்‌ ஏற்கனவே மீனவர்கள்‌ தொழில்‌ செய்ய முடியாமல்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. இந்த சட்டம்‌ அவர்களுக்கு மேலும்‌ பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
  2. மீன்‌ பிடிப்பதற்கு குறிப்பிட்ட பகுதியை வரையறை செய்வது சரியல்ல. காற்று, நீரோட்டம்‌ ஆகியவற்றின்‌ போக்கைத்‌ தீர்மானிக்க எவராலும்‌ முடியாது. எனவே, EEZ க்குள்‌ மீன்‌ பிடிக்க வேண்டும்‌ என்பது நடைமுறை சாத்தியமல்ல.
  3. லைசன்ஸ்‌ வழங்குவது, கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவது,
    அதிகாரிகளை நியமிப்பது போன்ற நடவடிக்கைகள்‌ மீனவர்களை குற்றவாளிகளாக ஆக்கும்‌ முயற்சியே ஆகும்‌.
  4. எனவே, இந்த சட்டத்தை நாங்கள்‌ அனைவரும்‌ ஒட்டுமொத்தமாக
    நிராகரிக்கிறோம்‌.
  5. மீனவர்களின்‌ வாழ்வாதாரத்தை அழிக்கும்‌ இந்த சட்டத்தை நிறைவேற்றாமல்‌ தடுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ சட்ட ரீதியாகவும்‌ அரசியல்‌ ரீதியாகவும்‌ உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு இக்‌ கூட்டத்தின்‌ மூலம்‌ கேட்டுக்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில்‌ –

தந்திராயன்‌ குப்பத்தைச்‌ சேர்ந்த மணி, ஆர்வி சுப்பிரமணி;
சோதனை குப்பம்‌ பன்னீர்செல்வம்‌, தேசப்பன்‌, மேரி தாஸ்‌;
முதலியார்‌ சாவடி கே வீரப்பன்‌, அசோகன்‌, ஜே; புகழ்‌;
நடுக்குப்பம்‌ தேசப்பன்‌, ராஜேந்திரன்‌, பி ரவி, மூர்த்தி, டி சரவணன்‌, கே ரமேஷ்‌ குமார்‌, கே.ஜானகிராம்‌, ஆறுமுகம்‌;
பொம்மையார்பாளையம்‌ வி. ராஜேந்திரன்‌;
பிள்ளை சாவடி செல்வம்‌, சிவன்‌ ராஜ்‌;

பெரிய முதலியார்‌ சாவடி தமிழ்ச்செல்வம்‌ ஆகிய மீனவப்‌ பிரதிநிதிகள்‌ பங்கேற்றனர்‌.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியின் முக தோற்றத்தை மாற்றியமைத்த கவுன்சிலர். குவியும் பாராட்டுக்கள்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் ஆர்ப்பரிக்கும் லைலத்துல் கத்ர் இரவு. (புகைப்படங்கள்)

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் YMJ சார்பாக ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம்!

டைம்ஸ் குழு

Leave a Comment