நேற்று 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் கோரித்தோப்பு பகுதியில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கு கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
மேலும், மாலை 6 மணி அளவில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், கண்காணிப்பு கேமரா முக்கியத்துவத்தைப் பற்றியும், அதன் அவசியத்தை பற்றியும் காவல் ஆய்வாளர் திரு, சரவணன் அவர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில், பரகத் நகர் இணை முத்தவல்லி பிலால் முஹம்மது, மணிச்சுடர் நிருபர் அமீர் பாஷா, திமுக பிரமுகர் A.R. சாதிக், கோட்டகுப்பம் குவைத் ஜமாத் துணைத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ், மிஸ்வாக் துணைத்தலைவர் சேட்டு, மிஸ்வாக் செயற்குழு உறுப்பினர் ஹுசைன் மற்றும் கோரி தோப்பு மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவினை ஹாஜாத் அலி மற்றும் அப்துல் அக்கீம் அவர்கள் முன்னிலையில் கோரி தோப்பு மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சி, கோரியை நினைவுபடுத்தும் விதமாக, இவ்விழா நடத்தப்பட்டதாக கோரித்தோப்பு இளைஞர்கள் தெரிவித்தனர்.