விழுப்புரம் மாவட்டம், SDPI கட்சியின் சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் A. அஹமது அலி அவர்களின் தலைமையில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.
இதில் AllC மாநில செயலாளர் M.முகமது பாதூஷா மிஸ்பாகி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார். இறுதியாக கோட்டக்குப்பம் நகர தலைவர் H.அப்துல்லா அவர்கள் நன்றி உரையாற்றினார்.
இதில் கட்சியின் நிர்வாகிகள் சிராஜ் இமாம், S.அப்துல் முத்தலிப், H.அக்பர் இப்ராஹிம், H.ஆதில்,
A.முகமது அலி, S.அஸாருதீன், M.அல்அமீன், S.கௌசர், A.தன்வீர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.