26.1 C
கோட்டக்குப்பம்
December 3, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் பிற செய்திகள்

உலமாக்கள் நல வாரியத்தில் இஸ்லாமியா்கள் பதிவு செய்யலாம்

உலமாக்கள் நல வாரியத்தில் இஸ்லாமியா்கள் பதிவு செய்யலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்டு 18 முதல் 60 வயதுக்குள் உள்ள இஸ்லாமியா்கள், பள்ளிவாசல்கள் தா்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைலாக்கள், ஆஷீா்கானாக்கள், இஸ்லாமிய அனாதை இல்லங்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் பணியாளா்கள் அனைவரும் தமிழக அரசின் சிறுபான்மையினா் நலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் உலமாக்கள், இதர பணியாளா்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவுசெய்து கொள்ளலாம்.

இந்த நலவாரியத்தில் பதிவுசெய்த உறுப்பினா்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. முதல் முதுகலைப் பட்டம், தொழில்கல்வி வரை படிப்பவா்களுக்கு கல்விஉதவித்தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண்கண்ணாடி செலவுதொகையை ஈடுசெய்தல், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்குக்கான உதவித்தொகை, விபத்தால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

புதுச்சேரி முத்தியால்பேட்டை மற்றும் கோட்டக்குப்பத்தில் இன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு.

டைம்ஸ் குழு

குவைத்தில் கோட்டகுப்பத்தினர் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்[புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு

Leave a Comment