ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை கண்டித்து தர்னாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி..சண்முகம் உள்பட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று (ஆக-31) செவ்வாய்க்கிழமை் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலை அருகே முன்னாள் அமைச்சர் சண்முகம் ஜெயலலிதா பல்கலை கழகத்தையை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை கண்டித்து திடீரென சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். பின் சில நிமிடங்களில் உடனடியாக அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் சி.வி.சண்முகம் கைதை கண்டித்து பிரதான சாலையான கோட்டக்குப்பம் எம். ஜி ரோட்டில் பேரூராட்சி மன்றம் எதிரில், கோட்டக்குப்பம் நகர செயலாளர் கணேசன், விழுப்புரம் சிறுபான்மையினர் தலைவர் அமீருதீன், அவை தலைவர் தண்டபாணி, சாலிஹ் மற்றும் பல அதிமுகவினர் திரளாக சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களையும் காவல் துறையினர் கைது செய்து திருமணமண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.